ADDED : செப் 30, 2025 11:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி; அவிநாசி கிளை த.மு. எ.க. சங்க மாநாடு நடைபெற்றது. மாநிலகுழு உறுப்பினர் ஈஸ்வரன் தலைமை வகித்து மாநாட்டை துவக்கி வைத்தார்.
இதில், கலை இலக்கியப் பண்பாட்டு அறிக்கை உறுப்பினர்களால் வாசிக்கப்பட்டது. தொடர்ந்து, 16 பேர் புதிய நிர்வாக குழுவினராக தேர்வு செய்யப்பட்டனர்.
தலைவராக சம்பத்குமார், செயலாளராக தினகரன், பொருளாளராக சிவராசன் தேர்வு செய்யப்பட்டனர். துணைத்தலைவராக காயத்ரி, துணை செயலாளராக ராஜேந்திரன், ரமேஷ்குமார் மற்றும் பாரதி தேர்வு செய்யப்பட்டனர்.
இன்றைய திருமணங்களின் நிலை என்ற தலைப்பில் கவிஞர் பார்வதி மற்றும் கலை இலக்கிய விமர்சகர் குணசுந்தரி ஆகியோர் பேசினர். ஆசிரியை காயத்ரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.