ADDED : பிப் 10, 2025 11:48 PM
n ஆன்மிகம் n
தைப்பூச பெருவிழா
திருமுருக வள்ளலார் கோட்டம், திருமுருகன்பூண்டி. கொடியேற்றம் - காலை 7:00 மணி. வீர ஆஞ்சநேயர் கோவில் வளாகம், சேவூர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவில் வளாகத்தில் அகவல் பாராயணம், அன்னதானம் - காலை 11:00 மணி.
n 16ம் ஆண்டு தைப்பூச பெருவிழா, வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்க சங்கம், பொங்கலுார். ஏழு திரை நீக்கி ஜோதி வழிபாடு - காலை 6:00 முதல் இரவு 10:00 மணி வரை.
தைப்பூச தேர்த்திருவிழா
ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவில், சிவன்மலை. மகா அபிேஷகம் - அதிகாலை 3:30 மணி. சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளுதல் - காலை 6:00 மணி. திருத்தேர் வடம் பிடித்தல் - மாலை 4:00 மணி.
n சென்னியாண்டவர் கோவில், விராலிக்காடு, கருமத்தம்பட்டி. சுவாமி தேருக்கு எழுந்தருளுதல் - காலை 6:15 மணி. தேர் வடம் பிடித்தல் - மாலை 4:45 மணி. சங்கமம் நாட்டுப்புறக்கலைக்குழுவின் வள்ளி கும்மி, ஒயிலாட்டம் - இரவு 7:00 மணி.
n வெற்றி வேலாயுத சுவாமி கோவில், கதித்தமலை, ஊத்துக்குளி. மகா அபிேஷகம் - அதிகாலை 3:30 மணி. சுவாமி புறப்பாடு - 5:30 மணி. தேர் வடம் பிடித்தல் - காலை 6:30 மணி. தேர் நிலை சேர்த்தல் - மாலை 4:00 மணி.
n ஸ்ரீ குழந்தை வேலாயுத சுவாமி கோவில், மலைக்கோவில், மங்கலம். சுவாமி வள்ளி தெய்வானையுடன் ரதாரோஹணம் - காலை 6:00 முதல், 7:00 மணி வரை. திருத்தேர் கிரிவலம் வருதல் - மாலை 3:00 மணி. சாய் கிருஷ்ணா நுண்கலைக்கூட மாணவியர் பரத நாட்டிய நிகழ்ச்சி - மாலை 5:00 மணி. அழகு முருகன் காவடிக்குழு கம்பத்தாட்டம் - இரவு 8:30 மணி.
தைப்பூச விழா
ஸ்ரீ அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. ஸ்ரீ சுப்ரமணிய சுவாமிக்கு அபிேஷகம், உபசார வழிபாடு - அதிகாலை 5:00 மணி. தீபாராதனை - காலை 7:00 மணி. ஸ்ரீ சுப்ரமணியர் தேர், சுவாமி திருவீதி உலா - மாலை 4:00 மணி.
n திருமுருகநாத சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி. பால்குடம் திருவீதி உலா - காலை 7:45 மணி. உற்சவமூர்த்தி பால் அபிேஷகம், சிறப்பு பூஜை - காலை 8:30 மணி.
n ஸ்ரீ காட்டுமாரியம்மன் கோவில், ஸ்ரீ பாலமுருகன் கோவில், அவிநாசி. சிறப்பு அபிேஷகம் - காலை 7:00 மணி. அலங்காரம், தீபாராதனை - 7:35 மணி.
தேர்த்திருவிழா
வெங்கடேச பெருமாள் கோவில், மொண்டிபாளையம், ஆலத்துார், சேவூர், அவிநாசி. பெருமாள் திருவீதியுலா புறப்பாடு - காலை 8:00 மணி. பரிவேட்டை குதிரை வாகனத்தில் புறப்பாடு - இரவு 8:00 மணி.
ஆண்டு விழா
41ம் ஆண்டு தைப்பூச அன்னதான விழா, பாதை கருப்பராயன் கோவில், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 7:30 முதல் 8:30 மணி வரை.
n பொது n
கால்கோள் விழா
புற்றுநோயாளிகளின் புத்துணர்வு மையத்துக்கு கால்கோள் விழா, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகம், தாராபுரம் ரோடு, திருப்பூர். பங்கேற்பு: அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி. காலை 11:00 மணி.