/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுங்கவரி முறையீடுகள்; 'துணைவன்' சேவை வெற்றிகரம்
/
சுங்கவரி முறையீடுகள்; 'துணைவன்' சேவை வெற்றிகரம்
ADDED : ஆக 02, 2025 11:17 PM

திருப்பூர்: ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் - ஏ.இ.பி.சி., முயற்சியால், சுங்கவரித்துறை குறைபாடுகளுக்கு, ஆன்லைன் மூலம் தீர்வு காணும், 'துணைவன்' இணைய சேவை தளம் உருவாக்கப்பட்டது.
இதுதொடர்பான ஆலோசனைக்கூட்டம் நேற்று, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில் நடந்தது.
திருச்சி சுங்கவரித்துறை கூடுதல் கமிஷனர் விஜய கிருஷ்ணவேலவன், ஏற்றுமதியாளருடன் கலந்துரையாடினார்.
ஏ.இ.பி.சி., துணைத்தலைவர் சக்திவேல் பேசியதாவது:
சுங்கவரித்துறை தொடர்பான முறையீடுகளை தெரிவிக்க, இணைய வசதியில்லை; நேரில் சென்றுதான் தீர்வு பெற வேண்டிய நிலை இருந்தது.
தொழில்துறையினருக்கு, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தொடர்பான முறையீடுகளை தெரிவித்து, தீர்வு பெற வசதியாக, 'துணைவன்' இணைய சேவை தளம் வடிவமைக்கப்பட்டது.
வேறு எங்கும் இல்லாத சேவை நம் நாட்டில், வேறு எங்கும் இந்த சேவை கிடையாது; முதன் முதலாக, திருப்பூரில் 'துணைவன்' சேவை துவக்கி வைக்கப்பட்டது; பயனுள்ளதாக இருக்கிறது. அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்பும், ஏ.இ.பி.சி., நிர்வாகிகளின் முயற்சியும் வெற்றியடைந்துள்ளது. சுங்கவரித்துறை மூலம் கிடைக்க வேண்டிய சேவை அல்லது உதவி கிடைக்காமல் இருந்தால், இத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பித்ததும், படிப்படியாக, தானியங்கி முறையில் தலைமை கமிஷனர் வரை செல்லும். விரிவாக பரிசீலித்து, தீர்வு வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
சந்தேகங்கள் இருந்தால், சம்பந்தப்பட்ட விண் ணப்பதாரரை தொடர்புகொண்டும், கூடுதல் விவரங்களை கேட்டுப்பெறுவார்கள்.
இவ்வாறு, அவர் பேசினார்.
திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் சந்தித்து வரும் சுங்கவரித்துறை சார்ந்த பிரச்னைகளுக்கு, எவ்வாறு, 'துணைவன்' தளத்தில் தீர்வு பெறலாம் என்பது குறித்த சந்தேகங்களை கேட்டறிந்தனர்.
நம்பிக்கை பிறந்தது
திருப்பூர் ஏற்றுமதி வர்த்தகத்தில், கப்பலில் சரக்கு அனுப்புவதாக இருந்தாலும் சரி, விமானத்தில் சரக்கு அனுப்புவதாக இருந்தாலும் சில பிரச்னைகளை சந்திக்க நேரிடுகிறது. இதுவரை, எவ்வித குறைதீர் கட்டமைப்பும் இல்லை; இனிமேல், 'துணைவன்' வாயிலாக விண்ணப்பித்து, எளிதாக தீர்வு பெறலாம் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது; ஏ.இ.பி.சி., வடிவமைத்த, 'துணைவன்' இணைய சேவை தளம், ஒன்றரை மாதங்களாக பயனுள்ளதாக மாறியிருக்கிறது.
- சுப்பிரமணியன்,
தலைவர்,திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம்.