திருப்பூர் : தென்னம்பாளையம் காய்கறி மார்க்கெட்டில், 14 கிலோ கொண்ட சிறிய கூடை, 280 ரூபாய், 26 கிலோ கொண்ட பெரிய கூடை, 520 ரூபாய்க்கு விற்றது.
உழவர் சந்தையில், தரமான முதல் தர தக்காளி கிலோ, 25 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் தக்காளி, ஐந்து கிலோ, 100 ரூபாய்க்கு ஆட்டோக்களில் கூவிகூவி விற்கப்படுகிறது.
தக்காளி விலை எப்படியும் கிலோ, 45 ரூபாய்க்கு மேல் தொடருமென எதிர்பார்த்திருந்தே விவசாயிகளுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.
விவசாயிகள் கூறியதாவது:
தக்காளி விளைந்து, விற்பனைக்கு வரும் போது விலை கிடைத்தால் மறுமுறை விவசாயிகள் பயிரிடுகின்றனர். இல்லாவிடில், தக்காளி பயிரிடுவதையே விட்டுவிடுகின்றனர். இதனால், தேவையான நேரத்துக்கு தக்காளி வராமலும், தேவையில்லாத நேரங்களில் கூடுதலாக தக்காளி வருவதும் வாடிக்கையாகவே உள்ளது.
தெற்கு மற்றும் வடக்கு உழவர் சந்தைக்கான தக்காளி வரத்து, விலையை மிகச்சரியாக நிர்ணயிக்க முடிவதில்லை. உழவர் சந்தைக்கு காய்கறி கொண்டு வரும் உள்ளூர் விவசாயிகளின் இந்த தடுமாற்றத்தால், திடீரென விலை உயர்வதும், விலை குறைவதும் அடிக்கடி நடக்கிறது.
இதை அறிந்து கொள்ளும் மொத்த தக்காளி வியாபாரிகள் வெளிமாநிலங்களில் இருந்து தக்காளியை மொத்தமாக வாங்கி கிலோவுக்கு நான்கு முதல் ஐந்து ரூபாய் கிடைத்தால் போதுமென விற்பனை செய்கின்றனர். தினமும், 200 டன் தக்காளி விற்பனையாகும் என்றால், 250 டன் வரை வரத்து குவிவதால், விலை தொடர்ந்து இறங்கிக் கொண்டே இருக்கிறது.
குறிப்பாக, வெளிமார்க்கெட்டில் கிலோ, 20 ரூபாய்க்கு கிடைப்பதால், உள்ளூர் முதல் தர தக்காளியை சந்தைக்கு வந்து வாங்க யாரும் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால், தேக்கம் அதிகமாகி விலை மேலும் குறையத்தான் செய்கிறது.