/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தக்காளி விளைச்சல் அதிகம்; விலையோ சரிவு: விவசாயிகள் கண்ணீர்
/
தக்காளி விளைச்சல் அதிகம்; விலையோ சரிவு: விவசாயிகள் கண்ணீர்
தக்காளி விளைச்சல் அதிகம்; விலையோ சரிவு: விவசாயிகள் கண்ணீர்
தக்காளி விளைச்சல் அதிகம்; விலையோ சரிவு: விவசாயிகள் கண்ணீர்
ADDED : பிப் 21, 2025 12:23 AM

பல்லடம்; ''விளைச்சல் உள்ளது; ஆனால், போதுமான விலை தான் இல்லை'' என, தக்காளி பயிரிட்டுள்ள விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
தக்காளி விலை படிப்படியாக சரிவடைந்து வருகிறது. இது, தக்காளி பயிரிட்டுள்ள விவசாயிகளை பெரிதும் பாதித்துள்ளது. விலை குறைவு காரணமாக, தக்காளிகளை ரோட்டோரத்தில் வீசி செல்வதும், விளை நிலத்திலேயே கொட்டி அழிப்பதுமான செயல்களில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர். திருப்பூர் வீதிகளில் 5 கிலோ முதல் 7 கிலோ வரை நுாறு ரூபாய்க்கு விற்கப்படுகிறது. விளைச்சல் அதிகமாக இருந்தும், போதுமான விலை இல்லை என்பது இவர்களது கவலை.
பல்லடம் அடுத்த, மாதப்பூர் ஊராட்சியை சேர்ந்த விவசாயி தேன்மொழி கூறுகையில், 'கடந்த ஐப்பசி மாதம் ஒன்றரை ஏக்கரில் தக்காளி நடவு செய்தோம். உழவு, களை எடுத்தல், பாத்தி, நாற்று நடவு, அறுவடை வரை, ஆயிரக்கணக்கில் செலவு செய்து, பறிப்பு கூலி, வண்டி வாடகை உள்ளிட்டவற்றை செய்த போதும், கடைசியில் கட்டுப்படியாகாத விலை தான் கிடைக்கிறது.
திருப்பூர் சந்தைக்குச் சென்று விற்றுவருகிறோம். தற்போது, டிப்பர் ஒன்று (14--16 கிலோ) , 200 ரூபாய்க்கு விற்பனையாகிறது. டிப்பர் ஒன்று, 300 ரூபாய்க்கு மேல் விற்பனையானால்தான் கட்டுபடி ஆகும். இல்லையெனில், வாடகை கூலிக்கு தான் சரியாக இருக்கும். அரசுதான் இதற்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும்'' என்றார்.

