ADDED : அக் 24, 2026 05:02 PM

தக்காளி ஆண்டு முழுவதும் விளையும் பயிர் தான். ஆனால் மழைக்காலம் வந்தால் போதும், பாரம்பரிய முறையில் நடவு செய்யும் விவசாயிகளுக்கு பெரும் சோதனை தான். செடி அழுகி, பழம் அழுகி நஷ்டம் நிச்சயம். ஆனால் இதே மழையை சமாளித்து லாபம் பார்க்கும் விவசாயிகளும் இருக்கிறார்கள். அவர்கள் பாணி வேறு.
நவீன ரக தக்காளி சாகுபடி செய்யும் விவசாயிகள், கம்புகளை ஊன்றி, கயிறு கட்டி, செடிகள் தரையில் படாமல் உயர்த்தி கட்டி விடுகிறார்கள். தொங்கியபடியே வளரும் செடி, மழையிலும் பத்திரமாக இருக்கிறது.
இதற்கு செலவு கொஞ்சம் கூடுதல் தான். கம்பு, கயிறு, ஆள் செலவு எல்லாம் சேரும். ஆனால் மழைக்காலத்தில் தக்காளி விலை எகிறும் போது அந்த செலவு லாபமாக திரும்பி விடுகிறது.
அதனால் தான் இப்போது பல விவசாயிகள் தக்காளியை பாதுகாக்க இந்த உயர்த்தி கட்டும் முறைக்கு மாறி வருகிறார்கள்.
படம் 3 காலம்
பொங்கலுார், அய்யப்பா நகர் அருகே தக்காளிச்செடிகளுக்கு கம்புகளை நட்டு கயிறுகளால் இழுத்து கட்டப்பட்டுள்ளது.
