நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; பழமை வாய்ந்த மூவர் கண்டியம்மன் கோவில் கோபுரம் புதுப்பிக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
உடுமலை அருகே சோமவாரப்பட்டியில், பழமை வாய்ந்த மூவர் கண்டியம்மன் கோவில் உள்ளது. ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள இக்கோவிலுக்கு நீண்ட காலமாக கும்பாபிேஷகம் நடத்தப்படாமல் இருந்தது.
நீண்ட இழுபறிக்குப்பிறகு, கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ள, ஹிந்து அறநிலையத்துறை அனுமதி வழங்கி, அக்., 21ல், பணிகள் துவங்கியது.
தற்போது, முன்கோபுரம் மற்றும் கோபுரம் புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. பழமை வாய்ந்த கோவில் கோபுரம் புதுப்பிக்கப்பட்டு வருவதால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.