/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
80 அடி ஆழ குவாரியில் கவிழ்ந்த டிராக்டர்
/
80 அடி ஆழ குவாரியில் கவிழ்ந்த டிராக்டர்
ADDED : மார் 08, 2024 01:35 AM

பல்லடம்;பல்லடம் அருகே, 80 அடி ஆழ கல்குவாரி ஒன்றில், டிராக்டருடன் தவறி விழுந்து, தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியை சேர்ந்தவர் மணி, 65; இவரது மனைவி லட்சுமி, 58; 4 மகன்கள், 5 மகள்கள் உள்ளனர். திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த, கோடங்கிபாளையம் ஊராட்சி பெருமாகவுண்டம்பாளையம் கிராமத்தில் குடும்பத்துடன் வசிக்கின்றனர். மணி, இங்குள்ள கல்குவாரி ஒன்றில் டிரில்லராக வேலை பார்க்கிறார்.
நேற்று காலை, மகன் ராதாகிருஷ்ணன், மருமகன் ரமேஷ், டிராக்டர் டிரைவர் சண்முக உடையான் ஆகியோர் குவாரிக்குள் வேலை செய்ய சென்றனர். இடையில், டிராக்டரை நிறுத்திவிட்டு சண்முக உடையான் இயற்கை உபாதை கழிக்க சென்றார்.
இதற்கிடையே, டிரில்லிங் பணியை தொடர்வதற்காக, டிராக்டரில் ஏறிய மணி, கம்ப்ரஸரை இயக்க செய்ய வேண்டி டிராக்டரை இயக்கினார். கியரில் இருந்த டிராக்டர், 80 அடி ஆழ கல்குவாரிக்குள் கவிழ்ந்தது. டிராக்டரில் இருந்த மணி, அதே இடத்தில் இறந்தார். பல்லடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

