/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பயனீர் ரோட்டரி சார்பில் வர்த்தக கண்காட்சி
/
பயனீர் ரோட்டரி சார்பில் வர்த்தக கண்காட்சி
ADDED : ஜூலை 22, 2025 12:20 AM

திருப்பூர்; திருப்பூர் பயனீர் ரோட்டரி சங்கம் சார்பில், 'வாவ் ஜாய்' என்ற பெயரில் வர்த்தக கண்காட்சி, திருப்பூர் - காங்கயம் ரோட்டில் உள்ள காயத்ரி திருமண மண்டபத்தில் நடந்தது.
திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.,விஜயகுமார், மேயர் தினேஷ்குமார், ரோட்டரி கவர்னர் தனசேகர், ரோட்டரி மக்கள் நல அறக்கட்டளை பொருளாளர் அருள்செல்வம், ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி முதல் பெண்மணி மஞ்சுளா, கிட்ஸ் கிளப் சேர்மன் மோகன் கார்த்திக் ஆகியோர் துவக்கி வைத்தனர். திருப்பூர் பயனீர் ரோட்டரி சங்க தலைவர் விவேகானந்தன், செயலாளர் சதாசிவம், பொருளாளர் நிஷாத் அகமது உட்பட பயனீர் ரோட்டரி நிர்வாகிகள் வரவேற்றனர்.
கண்காட்சியில், புடவைகள், நகைகள், அலங்கார பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், ஆயத்த ஆடைகள், உணவு பொருட்கள், மூலிகை பொருட்கள் உட்பட மதிப்பு கூட்டு பொருட்களை கொண்ட, 100க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய, 25 பெண்களுக்கு பயன்படும் வகையில், 1.5 லட்சம் மதிப்பிலான நிழற்குடை மற்றும் வணிக மேஜை ஆகியன வழங்கப்பட்டது.