/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சம்பள உயர்வு பேச்சு வார்த்தை தொழிற்சங்கங்கள் வேண்டுகோள்
/
சம்பள உயர்வு பேச்சு வார்த்தை தொழிற்சங்கங்கள் வேண்டுகோள்
சம்பள உயர்வு பேச்சு வார்த்தை தொழிற்சங்கங்கள் வேண்டுகோள்
சம்பள உயர்வு பேச்சு வார்த்தை தொழிற்சங்கங்கள் வேண்டுகோள்
ADDED : அக் 26, 2025 03:12 AM

திருப்பூர்: பனியன் நிறுவன தொழிலாளர்கள் சம்பள உயர்வு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என, ஏற்றுமதியாளர் சங்கத்துக்கு தொழிற்சங்கம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட அனைத்து பனியன் தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று, பி.என். ரோடு, ஏ.ஐ.டி.யு.சி. அலுவலகத்தில் நடந்தது. பனியன் பேக்டரி லேபர் யூனியன் ஏ.ஐ.டி.யு.சி. பொதுச் செயலாளர் சேகர் தலைமை வகித்தார்.
இதில், சி.ஐ.டி.யு. பனியன் சங்க தலைவர் உண்ணிகிருஷ்ணன், பொதுச் செயலாளர் சம்பத், பாலசுப்ரமணியன் (எல்.பி.எப்.), சிவசாமி (ஐ.என்.டி.யு.சி.), முத்துசாமி, அப்புக்குட்டி (எச்.எம்.எஸ்.), செந்தில் (பி.எம்.எஸ்.), விஸ்வநாதன் (ஏ.டி.பி.), வெங்கடாசலம் (எம்.எல்.எப்.), மனோகர் (டி.டி.எம்.எஸ்.), உள்ளிட்டோர் பங்கேற்றனர். பனியன் நிறுவன தொழிலாளர் சம்பள ஒப்பந்தம் கடந்த மாதம் முடிவடைந்து விட்டது.
இந்நிலையில் அனைத்து சங்கங்கள் சார்பில் இது குறித்த கோரிக்கை கடிதங்கள் உற்பத்தியாளர்கள் சங்கங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இதுவரை, பேச்சுவார்த்தை நடத்த அழைக்கப்படாமல் உள்ளது.
உடனடியாக பேச்சு வார்த்தை துவங்க வலியுறுத்தி உற்பத்தியாளர் சங்கத்துக்கு நினைவூட்டல் கடிதம் அளிப்பது, அதன் பின்னரும், அழைக்கவில்லை எனில், நவ., 11ம் தேதி கூட்டம் நடத்தி, அடுத்தகட்ட போராட்டம் குறித்து விவாதிப்பது என முடிவு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து, ஏற்றுமதியாளர் சங்கத்துக்கு, சம்பள பேச்சுவார்த்தைக்கான அழைப்பு குறித்த கடிதம் அளிக்கப்பட்டது.

