/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கால்நடைச் சந்தையில் ரூ.1.85 கோடிக்கு வர்த்தகம்
/
கால்நடைச் சந்தையில் ரூ.1.85 கோடிக்கு வர்த்தகம்
ADDED : மார் 25, 2025 06:54 AM

திருப்பூர்; கோவில்வழி அடுத்த அமராவதிபாளையத்தில் திங்கள்தோறும் கால்நடை சந்தை நடக்கிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் லாரி, வேன்களில் வந்து மாடு, கன்றுகுட்டிகள், எருமைகளை வாங்கிச் செல்கின்றனர். வளர்க்கவும், உழவு பணிக்கு விவசாயிகளும் மாடு வாங்க வருகின்றனர்.
தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை, சீசன் துவக்கம் காரணமாக நேற்று மாடுகள் வரத்து, ஆயிரமாக உயர்ந்தது. கடந்து நான்கு மாதமாக வரத்து, 850 முதல், 950 ஆக இருந்த நிலையில், நேற்று வரத்து ஆயிரத்தை எட்டியது.
பிற ரகங்களை விட, கன்று குட்டிகளே அதிகளவில் வந்திருந்தது. நேற்று கன்றுகுட்டி, 2,500 - 3,500 ரூபாய். காளை, 25 ஆயிரம் - 29 ஆயிரம், எருமை, 24 ஆயிரம் - 28 ஆயிரம், மாடு, 26 ஆயிரம் - 32 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது.
வரத்து அதிகரிப்பால் முந்தைய வாரத்தை விட நடப்பு வாரம் காளை விலை, 4,000 ரூபாயும், எருமை விலை, 2,000 ரூபாயும், மாடு விலை ஆயிரம் ரூபாயும் குறைந்துள்ளது. அதே நேரம், முதல்தர கன்று குட்டி, 3,500 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
மாடு வரத்து அதிகரித்த நிலையில், விலை உயரா விட்டாலும், 1.85 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்ததாக சந்தை ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.