தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/தீபாவளி நெரிசலுக்கேற்ப போக்குவரத்து மாற்றம்

தீபாவளி நெரிசலுக்கேற்ப போக்குவரத்து மாற்றம்

தீபாவளி நெரிசலுக்கேற்ப போக்குவரத்து மாற்றம்


UPDATED : அக் 24, 2026 04:37 AM

ADDED : அக் 24, 2026 04:35 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 24, 2026 04:37 AM ADDED : அக் 24, 2026 04:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்:தீபாவளி பண்டிகை நவ. 8ம் தேதி கொண்டாடப்படுகிறது. நவ. 4 முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. திருப்பூரில் நெரிசலை தவிர்க்க போக்குவரத்து மாற்றம் செய்வது குறித்து போலீசார், போக்குவரத்து கழக அதிகாரிகள் இணைந்து கூட்டாய்வு மேற்கொண்டனர்.

நவ. 6, 7ம் தேதிகளில் அதிக பயணிகள் வெளியூர் செல்வார்கள் என்பதால் முன்னேற்பாடு பணிகள் துவங்கியுள்ளன. எந்த பஸ் ஸ்டாண்டில் இருந்து

எந்த வழித்தடத்தில் எவ்வளவு பஸ் இயக்கப்படும் என்பது குறித்து திருப்பூர் வடக்கு, தெற்கு போக்குவரத்து போலீசார், போக்குவரத்து கழக அதிகாரிகள் நேற்று முன்தினம் முதல் நேற்று வரை 30க்கும் மேற்பட்ட இடங்களில் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

புதிய பஸ் ஸ்டாண்ட் முன்புற 60 அடி ரோடு சந்திப்பு, சாந்தி தியேட்டர் முதல் மில்லர் ஸ்டாப் வரை, குமார் நகர், தீயணைப்பு நிலையம், புஷ்பா தியேட்டர், ரவுண்டானா, எம்.ஜி.ஆர். சிலை சிக்னல், மத்திய

பஸ் ஸ்டாண்ட், கோவில்வழி பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் நெரிசலை தவிர்க்கும் வழிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

புதிய மற்றும் மத்திய பஸ் ஸ்டாண்டை விட கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் இருந்து கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதால், அங்கிருந்து நகருக்குள் வர கோவில்வழி வரை பஸ் இயக்குவது குறித்தும், திருச்சி, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் பஸ்களின் வழித்தட மாற்றம் குறித்தும் விவாதிக்கப் பட்டுள்ளது.

போக்குவரத்து போலீசார் கூறுகையில், ''பஸ் நிற்குமிடத்தை இடம் மாற்றும்போது பயணிகளுக்கு குழப்பம் ஏற்படுகிறது. ஞாயிறு தீபாவளி என்பதால் வியாழன் முதல் சீராக பயணம் இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.

முக்கிய சந்திப்புகளில் நெரிசல் அதிகமானால் சூழலுக்கு ஏற்ப போக்குவரத்து மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. நிரந்தர போக்குவரத்து மாற்றம் இல்லை, அடுத்தகட்ட ஆய்வுக்கு பின் அறிவிப்பு வெளியிடப்படும்'' என்றனர்.

ஒவ்வொரு ரயிலுக்கும் காத்திருப்போர் 600+


தீபாவளிக்கு, 3 நாட்கள் முன்பான நவ. 5, 6, 7ம் தேதிகளுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு முழுமையாக நிறைவடைந்து காத்திருப்போர் பட்டியல் 600க்கு மேல் நீள்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை வழியாக நாகர்கோவில் செல்ல இரவில் ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் (22668) மட்டுமே உள்ளது.

இதில் ஏ.சி. படுக்கை உட்பட அனைத்து முன்பதிவு இருக்கைகளும் நிரம்பி விட்டன. கன்னியாகுமரி, விவேக், குருதேவ் எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் முன்பதிவு முடிந்து விட்டது என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

பயணிகள் கூறுகையில், மேற்கு மண்டலத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்ல ஒரே ஒரு ரயில் மட்டுமே இருப்பதால் பண்டிகை நாட்களில் கூட்டம் அலைமோதுகிறது. காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களுக்கு டிக்கெட் கிடைக்க 20 சதவீதம் கூட வாய்ப்பில்லை.

எனவே திருப்பூர், ஈரோடு வழியாக கோவை - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில் அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

போனஸ் பட்டுவாடா துவக்கம்; இனி, விற்பனை களைகட்டும்


கண்ணை கவரும் வண்ண விளக்கு அலங்காரத்துடன் ஜவுளிக்கடைகள், பர்னிச்சர் கடைகள் தீபாவளி சிறப்பு விற்பனையை துவக்கி

விட்டன என வியாபாரிகள் தெரிவித்தனர்.

தீபாவளிக்கு 14 நாட்களே இருப்பதால் பின்னலாடை நிறுவனங்கள், ஓட்டல்கள், கடைகளில் போனஸ் பட்டுவாடா துவங்கிவிட்டது.இதனால் ஜவுளிக்கடைகளில் கூட்டம் வரத்துவங்கிவிட்டது என கடை உரிமையாளர்கள் கூறினர்.

நகரில் உள்ள ஜவுளிக்கடைகள், பர்னிச்சர், மொபைல் போன், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் கடைகள் என அனைத்தும் 15 முதல் 20 சதவீத தள்ளுபடியுடன் சிறப்பு விற்பனையை துவக்கியுள்ளன. பட்டாசு கடைகளுக்கு உரிமம் கேட்டு விண்ணப்பித்தவர்கள் ஷெட் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பண்டிகைக்கு முன் வரும் இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் ரோடுகளில் கூட்டம் அலைமோதும் என்பதால் போலீசார் கண்காணிப்பை பலப்

படுத்தியுள்ளனர். கண்காணிப்பு கோபுரங்கள், ஒலிபெருக்கி விழிப்பு ணர்வு,

போக்குவரத்து கட்டுப்பாடு என விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என போலீசார் தெரிவித்தனர்.Image 1635178

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us