UPDATED : அக் 10, 2026 12:50 AM
ADDED : அக் 10, 2026 12:48 AM
அ நிறம் | அளவு
திருப்பூர்: ஈரோடு–திருப்பூர் வழித்தடத்தில், இங்கூர் அருகே நாளை (11ம் தேதி) ரயில் பாலம் பணி நடைபெறுவதால், திருச்சி–பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் (16843) தாமதமாக இயக்கப்படும்.
பாலம் பணிக்காக ஈங்கூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும் ரயில், பணி முடிந்ததும் தாமதமாகப் புறப்படும். இதனால் ஊத்துக்குளி, திருப்பூர் நிலையங்களுக்கு தாமதமாகச் சென்றடையும்.
மேலும், இருகூரில் இருந்து கோவை வழியாகச் செல்லாமல், போத்தனுார் வழியாக பாலக்காடு செல்லும். இதனால் சிங்காநல்லுார், பீளமேடு, கோவை வடக்கு, கோவை ஜங்ஷன் நிலையங்களுக்கு இந்த ரயில் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
