/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கர்நாடக மாநில தென்னை விவசாயிகளுக்கு பயிற்சி
/
கர்நாடக மாநில தென்னை விவசாயிகளுக்கு பயிற்சி
ADDED : நவ 12, 2024 05:34 AM

உடுமலை ; உடுமலை அருகேயுள்ள, தளி, திருமூர்த்திநகர் பகுதியில், மத்திய தென்னை வளர்ச்சி வாரியம் நாற்றுப்பண்ணை மற்றும் தென்னை மகத்துவ மையம் உள்ளது.
இந்த மையத்திற்கு, கர்நாடகா மாநிலம், தென்னை வளர்ச்சி வாரியம், பெங்களூரு மண்டல அலுவலகத்தில் சார்பில், மாண்டியா மாவட்டத்தில் இருந்து, 50-க்கும் மேற்பட்ட தென்னை விவசாயிகள் களப்பயிற்சி மேற்கொண்டனர்.
தளி மத்திய தென்னை வளர்ச்சி வாரிய உதவி இயக்குனர் ரகோத்துமன், தென்னையில் தாய் மரத் தேர்வு, விதை காய்களை தேர்ந்தெடுத்தல், நாற்றாங்கால் நடவு மற்றும் பராமரிப்பு, இளந்தென்னை பராமரிப்பு, ஒருங்கிணைந்த உர நிர்வாகம், களை மற்றும் பூச்சி நிர்வாகம், பூச்சி நோய் மேலாண்மை, உர மேலாண்மை மற்றும் அறுவடைக்கு பின் செய்நேர்த்தி, தென்னை சார்ந்த தென்னை உப பொருட்கள் தயாரிப்பது குறித்து விளக்கினார். மேலும், தென்னை சாகுபடி குறித்த உயர் தொழில் நுட்பங்கள் குறித்து, செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

