/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாற்றம் தரும் தொழில்நுட்பங்கள்: ஏற்றம் பெறும் பின்னலாடை துறை
/
மாற்றம் தரும் தொழில்நுட்பங்கள்: ஏற்றம் பெறும் பின்னலாடை துறை
மாற்றம் தரும் தொழில்நுட்பங்கள்: ஏற்றம் பெறும் பின்னலாடை துறை
மாற்றம் தரும் தொழில்நுட்பங்கள்: ஏற்றம் பெறும் பின்னலாடை துறை
ADDED : ஆக 10, 2025 10:45 PM

திருப்பூர்:
திருப்பூர் - காங்கயம் ரோட்டிலுள்ள டாப்லைட் வளாகத்தில், 23வது நிட்ஷோ கண்காட்சி கடந்த 8ல் துவங்கியது. ஐந்து மெகா அரங்குகளில், 450 ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஐரோப்பா, இத்தாலி, தைவான், சீனா உள்பட வெளிநாடுகள்; 'மேக் இன் இந்தியா'வுக்கு பலம் சேர்க்கும்வகையிலான உள்நாட்டு தயாரிப்பிலான ஆடை உற்பத்தி இயந்திரங்கள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.
நிட்ஷோ கண்காட்சி நிர்வாக இயக்குனர் கிருஷ்ணா கூறியதாவது:
நிட்ஷோ கண்காட்சி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி வெளிமாநில ஆடை உற்பத்தி, ஜாப்ஒர்க் துறையினரும் மிகுந்த ஆர்வமுடன், கண்காட்சியில் பங்கேற்றனர். வைக்கப்பட்டிருந்த அதிநவீன இயந்திரங்களை பார்வையிட்டுள்ளனர்.
குறிப்பாக, நிறுவனங்களை விரிவு படுத்த திட்டமிட்டுள்ள நிறுவனத்தினர், புதிய தொழில்முனைவோர் ஏராளமானோர் பங்கேற்றனர். மூன்று நாட்களில் மொத்தம் 30 ஆயிரம் பேர், கண்காட்சியை பார்வையிட்டுள்ளனர்; மொத்தம் 400 கோடி ரூபாய் மதிப்பில் இயந்திரங்கள் கொள்முதலுக்கான வர்த்தக விசாரணை நடைபெற்றுள்ளது.
நவீன தொழில்நுட்ப இயந்திர தேடல்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் பூர்த்தி செய்ததால், கண்காட்சியை பார்வையிட்ட தொழில் துறையினரும்; வர்த்தக விசாரணைகள் சிறப்பாக நடைபெற்றதால், இயந்திரங்களை காட்சிப்படுத்திய நிறுவனத்தினரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கண்காட்சியில் இடம்பெற்றிருந்த நவீன இயந்திரங்களை நிறுவுவதன்மூலம், திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறையின், லட்சம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் என்கிற இலக்கை நோக்கிய பயணம், இன்னும் வேகம் பெறும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

