/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மதுக்கடையை அகற்ற த.வெ.க., ஆர்ப்பாட்டம்
/
மதுக்கடையை அகற்ற த.வெ.க., ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 22, 2025 05:26 AM

உடுமலை: பெண்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு இடையூறாக உள்ள, 'டாஸ்மாக்' மதுக்கடையை இடம் மாற்ற வலியுறுத்தி, உடுமலையில் த.வெ.க., வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
உடுமலை நகராட்சி அலுவலகம் முன் நேற்று மாலை, த.வெ.க., திருப்பூர் தெற்கு மாவட்டம் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், உடுமலை ராஜேந்திரா ரோட்டிலுள்ள, 'டாஸ்மாக்' மதுக்கடையால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. மதுக்கடை அருகில், அரசுப்பள்ளி மற்றும் மக்கள் பயன்படுத்தும் பூங்கா அமைந்துள்ளது.
'குடி'மகன்களால், அப்பகுதியில், பெண்கள் நடமாட முடியாத நிலை உள்ளது. பெண்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு இடையூறாக உள்ள மதுக்கடையை இடம் மாற்ற, பல முறை மனுக்கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதே நிலை நீடித்தால், மதுக்கடை முன் விரைவில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

