/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுரங்க பாலம் சாலை சீரமைப்பு மும்முரம்
/
சுரங்க பாலம் சாலை சீரமைப்பு மும்முரம்
ADDED : ஜன 06, 2025 05:03 AM

திருப்பூர் :  திருப்பூர் கோர்ட் ரோட்டையும், லட்சுமி நகர் பகுதியையும் இணைக்கும் வகையில், டி.எம்.எப்., மருத்துவமனை அருகே சுரங்க பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
ஊத்துக்குளி ரோடு மற்றும் ரயில்வே பாதையைக் கடந்து செல்லும் வகையில், இந்த பாலம் பல ஆண்டுகள் முன்னர் கட்டப்பட்டது.
பாலத்தின் மையம் மற்றும் அணுகு சாலை வரை கான்கிரீட் தளமாக அமைக்கப்பட்டது. ரோடு பெருமளவு சேதமடைந்து பெரும் சிரமம் நிலவியது.
மேலும், வாகனங்கள் பழுதாவதும், சிறு விபத்துகள் நிகழ்வதும் வாடிக்கையாக இருந்தது.
மாநகராட்சி பொது நிதியில் 20 லட்சம் ரூபாய் செலவில் ரோடு சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக சுரங்க பாலம் வழியாக வாகனப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு பணி துவங்கியுள்ளது.ரோடு சீரமைப்பு பணி ஏறத்தாழ 5 நாட்களுக்கு மேற்கொள்ளப்படும்; அதன் பின் குறைந்த பட்சம் 15 நாட்களுக்கு கியூரிங் பணி மேற்கொண்டு அதன் பின்பே இவ்வழியாக வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்படும் எனத் தெரிகிறது.

