/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உதயநிதி பிறந்த நாள் விழா: ரோட்டை ஆக்கிரமித்து பேனர்
/
உதயநிதி பிறந்த நாள் விழா: ரோட்டை ஆக்கிரமித்து பேனர்
உதயநிதி பிறந்த நாள் விழா: ரோட்டை ஆக்கிரமித்து பேனர்
உதயநிதி பிறந்த நாள் விழா: ரோட்டை ஆக்கிரமித்து பேனர்
ADDED : டிச 01, 2025 05:50 AM

பெருமாநல்லுார்: துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி, பெருமாநல்லுார், தெற்கு வீதியில் நடந்தது.
பெருமாநல்லுார் ஊராட்சி தி.மு.க. மற்றும் வடக்கு ஒன்றிய தி.மு.க. இளைஞர் அணி சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு, ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன், தலைமை வகித்தார். ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் மணிகண்டன், முன்னிலை வகித்தார். மாவட்ட பிரதிநிதி வேலுச்சாமி, வரவேற்றார்.
வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தினேஷ் குமார், வடக்கு மாநகர பொறுப்பாளர் தங்கராஜ் அன்னதானத்தை தொடங்கி வைத்தனர்.
பெருமாநல்லுார் ரோட்டரி சங்கம் சார்பில் கட்டப்பட்ட ஆர்.ஓ. வாட்டர் நிலையத்தில் உபரி நீர் சேகரிப்பு தொட்டியை திறந்து வைத்தனர்.
கட்சியினர் மூன்று நாள் முன்பே ரோட்டை ஆக்கிரமித்து பேனர் வைத்தனர். பேனரால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.