/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வேப்பம்பூ பஞ்சாமிர்த அபிேஷகம் கோவில்களில் 'யுகாதி' கோலாகலம்
/
வேப்பம்பூ பஞ்சாமிர்த அபிேஷகம் கோவில்களில் 'யுகாதி' கோலாகலம்
வேப்பம்பூ பஞ்சாமிர்த அபிேஷகம் கோவில்களில் 'யுகாதி' கோலாகலம்
வேப்பம்பூ பஞ்சாமிர்த அபிேஷகம் கோவில்களில் 'யுகாதி' கோலாகலம்
ADDED : மார் 31, 2025 06:07 AM

திருப்பூர்; தெலுங்கு மற்றும் கன்னட வருட பிறப்பு, 'யுகாதி' பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. திருப்பூரில், நேற்று, 'யுகாதி' பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன.
விநாயகர் கோவில்களில், வேப்பம்பூ கலந்த பஞ்சாமிர்தத்தாலும், கொடுமுடி, அவிநாசி பகுதிகளில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்தும், சிறப்பு அபிேஷகம் நடந்தது. வேப்பம் பூ கலந்த பஞ்சாமிர்தம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
திருப்பூர் ஸ்ரீசடையப்பன் கோவிலில், வாலிபாளையம் மக்கள் சார்பில் பூவோடு, தீர்த்தக்குடம், காவடியாட்ட ஊர்வலம் நடந்தது. கல்யாண சுப்பிரமணியர் கோவிலில் இருந்து, காவடியாடியபடி சென்ற பக்தர்கள், சடையப்ப சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
ஊத்துக்குளி ரோடு காசி விஸ்வநாதர் கோவிலில், யுகாதி பண்டிகை திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது. நேற்று முன்தினம், காலை, 7:00 மணிக்கு, காசி விஸ்வநாதருக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. என்.ஆர்.கே., புரம் விநாயகர் கோவிலில் இருந்து சீர்வரிசை எடுத்துவரப்பட்டது. சொக்கநாயகி சமேத சிவலோகநாதருக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன. கூனம்பட்டி திருமடம் நடராஜ சுவாமிகள் முன்னிலையில், சொக்கநாயகி சமேத சிவலோகநாதர் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது.
கருவம்பாளையம் பூச்சக்காடு செல்வ விநாயகர் கோவிலில், சிறப்பு அபிேஷகம் நடந்தது. பக்தர்கள், அவிநாசியில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து வந்து சுவாமிக்கு அபிேஷகம் செய்தனர். சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. பக்தர்களுக்கு நீர்மோர் மற்றும் பானகம் வழங்கப்பட்டது.