/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கச்சேரி வீதியில் நகர முடியல! நடவடிக்கை தேவை
/
கச்சேரி வீதியில் நகர முடியல! நடவடிக்கை தேவை
ADDED : செப் 30, 2025 10:13 PM
உடுமலை: அரசு அலுவலகங்கள் வரிசையாக அமைந்துள்ள, கச்சேரி வீதியில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, 'பார்க்கிங்' விதிமுறைகளை முறையாக அமல்படுத்த வேண்டும்.
உடுமலை கச்சேரி வீதியில், தாலுகா அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், தலைமை தபால் நிலையம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் வரிசையாக அமைந்துள்ளன.
தளி ரோடு வழியாக வரும் ஆம்புலன்ஸ்கள், அரசு மருத்துவமனைக்கு கச்சேரி வீதி வழியாகவே செல்ல வேண்டும். குறுகலான இந்த ரோட்டில், போக்குவரத்து நெரிசல் நிரந்தரமாக உள்ளது.
கடந்தாண்டு, ரோட்டோரத்தில் இருந்த தள்ளுவண்டி கடைகளை அகற்றி, வாகனங்களை நிறுத்த இடவசதி ஏற்படுத்தப்பட்டது.
மேலும், ரோட்டின் ஒரு பகுதியில் மட்டும், வாகனங்களை நிறுத்தும் வகையில், 'நோ பார்க்கிங்' தகவல் பலகையும் வைக்கப்பட்டது. ஆனால், 'நோ பார்க்கிங்' விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல், வாகனங்களை தாறுமாறாக நிறுத்திக்கொள்கின்றனர். இதனால், அனைத்து நேரங்களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக, 'நோ பார்க்கிங்' பகுதியில், நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபாரதம் விதித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
இதனால், வாகன ஓட்டுநர்கள், 'பார்க்கிங்' செய்ய ஒதுக்கீடு செய்யப்பட்ட குட்டைத்திடல் மைதானம், தாலுகா அலுவலகம் எதிரிலுள்ள காலியிடத்தை பயன்படுத்துவார்கள். இது குறித்து அனைத்து அரசுத்துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.