/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நிறைவேறாத கோரிக்கை; ஆட்டோ ஓட்டுநர்கள் மனு
/
நிறைவேறாத கோரிக்கை; ஆட்டோ ஓட்டுநர்கள் மனு
ADDED : ஏப் 15, 2025 11:43 PM

பல்லடம்; பல்லடம், ஆட்டோ ஓட்டுநர்கள் கூறியதாவது:
கடந்த, 2016ல், ஆர்.டி.ஓ., தலைமையில், பல்லடம் பஸ் ஸ்டாண்ட் ஆட்டோ ஓட்டுனர்களுக்கான அமைதிப் பேச்சுவார்த்தை நடந்தது. அதில், பஸ் ஸ்டாண்ட் பகுதியிலுள்ள ஆட்டோ ஸ்டாண்டுகளில், புதிதாக, 13 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஏற்கனவே ஆட்டோ ஓட்டி வரும் உரிமையாளர்கள் சிலர், சம்பளத்துக்கு ஓட்டுனர்களை நியமித்து விதிமீறி ஆட்டோ ஓட்டி வருகின்றனர். மேலும், சிலர் அனுமதியை விற்று வருவதாகவும் பேச்சு உள்ளது. புதிதாக ஆட்டோ ஓட்ட அனுமதி வழங்குமாறு, நாங்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை.
கடந்த, ஏழு ஆண்டுகளாக ஆட்டோ ஓட்ட அனுமதி கேட்டு வருகிறோம். விதிமுறை மீறி ஆட்டோ ஓட்டுபவர்களை அனுமதித்து விட்டு, எங்களை போன்ற ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. ஏழு ஆண்டுகளாக நீடித்து வரும் இப்பிரச்னையால், நிரந்தரமாக ஆட்டோ நிறுத்த இடம் இன்றி அவதிப்படுகிறோம். எனவே, எங்களுக்கு ஆட்டோ ஓட்ட அனுமதி வழங்கி, பிரச்னைக்கு உரிய தீர்வு ஏற்படுத்த வேண்டும், என்றனர்.