/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுகாதாரமற்ற உணவு தயாரிப்புக்கு பணியிட மாற்றம் மூலம் கடிவாளம்
/
சுகாதாரமற்ற உணவு தயாரிப்புக்கு பணியிட மாற்றம் மூலம் கடிவாளம்
சுகாதாரமற்ற உணவு தயாரிப்புக்கு பணியிட மாற்றம் மூலம் கடிவாளம்
சுகாதாரமற்ற உணவு தயாரிப்புக்கு பணியிட மாற்றம் மூலம் கடிவாளம்
ADDED : ஜூன் 07, 2025 12:19 AM
திருப்பூர்,; உணவு பாதுகாப்பு துறையில், 3 ஆண்டுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் மாவட்ட நியமன அலுவலர்கள் துவங்கி, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் வரை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மாநிலம் முழுக்க, ஓட்டல், தள்ளுவண்டிக் கடைகள், பேக்கரி உள்ளிட்ட உணவு தயாரிப்பு தொடர்புடைய ஓட்டல் உள்ளிட்ட நிறுவனங்களை கண்காணிப்பது, அவற்றை உரிமம் பெறச் செய்வது, தயாரிக்கப்படும் உணவு பண்டங்களின் தரத்தை உறுதிப்படுத்துவது உள்ளிட்ட பணிகளில் உணவு பாதுகாப்புத்துறையினர் கவனம் செலுத்தி வருகின்றனர்.
மாவட்ட வாரியாக நியமன அலுவலர்கள் மற்றும் தாலுகா அளவில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஆனால், பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் அலுவலர்கள் பலர் பணியாற்றி வந்த நிலையில், 3 ஆண்டுக்கு மேல் ஓரே இடத்தில் பணியாற்றி வரும் மாவட்ட நியமன அலுவலர்கள் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஒட்டு மொத்தமாக பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
சிலருக்கு அருகே உள்ள மாவட்டங்கள், பலருக்கு தொலைதுார மாவட்டங்களுக்கும் பணியிட மாறுதல் கிடைத்துள்ளது. இதன் வாயிலாக பணி செய்யும் இடத்தில் எவ்வித பாரபட்சமுமின்றி, சுகாதாரமற்ற உணவு தயாரிப்புக்கு கடிவாளம் போடுவதுடன், உணவு பாதுகாப்பு விதிமீறி செயல்படும் நிறுவனங்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என உணவு பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.