/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'முக்கியத்துவம் பெறாத முதல் நிலை நகராட்சி'
/
'முக்கியத்துவம் பெறாத முதல் நிலை நகராட்சி'
ADDED : அக் 02, 2025 11:09 PM
திருப்பூர்:'திருமுருகன்பூண்டி நகராட்சி, முதல் நிலை நகராட்சி அந்தஸ்து பெற்றும், அதற்கேற்ப உட்கட்டமைப்பு வசதி இல்லை' என, நுகர்வோர் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
திருமுருகன்பூண்டி தி கன்ஸ்யூமர் கேர் அசோசியேஷன் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில், சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாவட்ட கலெக்டர் தலைமையில் நடக்கும் குறைகேட்பு கூட்டத்தில் வழங்கப்படும் மனுக்களுக்கு, மனித வள மேலாண்மை துறையின் அறிவுறுத்தல் படி, 30 நாளில் தீர்வு வழங்க வேண்டும்.
சாலை வசதி என்பது, மக்களின் அத்தியாவசியமாக உள்ள நிலையில், தேசிய, மாநில, மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகங்களின் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, பராமரிப்பு செய்ய வேண்டும்.
திருமுருகன்பூண்டி, கோவில் சார்ந்த புராதன நகரம். முதல் நிலை நகராட்சியாக தரம் உயர்ந்தும், அதற்குரிய தகுதியான பிரத்யேக பஸ் ஸ்டாண்ட், தினசரி மார்க்கெட், ஆடு, மாடு வதைக்கூடம், இறைச்சி, மீன் கூடம் உள்ளிட்ட எந்தவொரு கட்டமைப்பும் ஏற்படுத்தப்படவில்லை.
ஒவ்வொரு மதத்தினருக்குமான சு டுகாடு, இடுகாடும் இல்லை. உட்கட்டமைப்பு மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவிநாசி சாலையை ஒட்டி, அரசின் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் டைடல் நியோ பார்க் கட்டுமானங்கள் உள்ள நிலையில், அங்குள்ளவர்களின் பயண வசதிக்காக, அங்கு புறநகர் மற்றும் டவுன் பஸ்கள் நின்று, பயணிகளை ஏற்றி, இறக்கி செல்வதற்கான ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.இவ்வாறு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.