/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தடைபடாது பயணம் இழுபறி முடிவு; பாலம் பணிக்கு ரூ.42 கோடி
/
தடைபடாது பயணம் இழுபறி முடிவு; பாலம் பணிக்கு ரூ.42 கோடி
தடைபடாது பயணம் இழுபறி முடிவு; பாலம் பணிக்கு ரூ.42 கோடி
தடைபடாது பயணம் இழுபறி முடிவு; பாலம் பணிக்கு ரூ.42 கோடி
ADDED : பிப் 22, 2024 05:29 AM

திருப்பூர்: பதினான்கு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த பாலம் கட்டுமானப்பணி, விரைவில் துவங்கவுள்ளது.திருப்பூர் அணைப்பாளையம் பகுதியில் இருந்து மங்கலம் சாலை பகுதிக்கு செல்லும் வகையில், கடந்த, 2008ல் பாலம் அமைக்க பூமி பூஜை நடந்தது. தேவைப்படும் நிலம் கையகப்படுத்தப்படும்போது சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்கள் சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனால் நீண்ட காலமாக இந்த பாலப்பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்படும் இந்தப்பணி எப்போது முடியுமோ என்ற கவலை எழுந்தது.
காலேஜ் ரோட்டில் இருந்து சாமுண்டிபுரம் ரிங் ரோடு செல்லும் வகையில் பாலம் பணி முடிந்துள்ளது. இது, பாலத்தின் வடபகுதி. கோர்ட் வழக்கு காரணமாக, காலேஜ் ரோட்டில் இருந்து மங்கலம் ரோட்டுக்கு செல்லும் வகையில் பாலம் பணி முடியாமல் உள்ளது. இது, பாலத்தின் தென்பகுதி.
இந்த பாலம் பயன்பாட்டுக்கு வந்தால் மங்கலம் ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் காலேஜ் ரோட்டுக்கு எளிதாக செல்ல முடியும். இதனால், நெரிசல் குறையும் என, எதிர்பார்க்கப்பட்டது.
துணை மேயர் பாலசுப்பிரமணியம் முயற்சியால், வழக்கு தொடுத்தவர்களில் சிலர், வழக்கை திரும்ப பெற முன்வந்தனர்; இதையடுத்து, நில அளவீடு பணி நடந்தது.நெடுஞ்சாலைத்துறை (திட்டங்கள்) பிரிவு அதிகாரிகள் கூறுகையில், 'பாலம் கட்டும் பணியில் இருந்து ஆட்சேபனைகள் அனைத்தும் சரிசெய்யப்பட்டு விட்டது. 42.6 கோடி ரூபாய் மதிப்பில் பணிக்கு, டெண்டர் விடப்பட்டு விட்டது; விரைவில் பணி துவங்கும்,' என்றனர்.
பணி துவங்கினால், ஒரு மாதத்துக்குள் பணியை முடிக்க வாய்ப்பு உள்ளது.