/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம்
/
சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம்
சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம்
சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம்
ADDED : மார் 06, 2024 12:08 AM
பொங்கலுார்;வேலம்பட்டி சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என்று, பொங்கலுார் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொங்கலுார் ஒன்றியக் குழு கூட்டம், ஒன்றியக்குழு தலைவர் குமார் தலைமையில் நடந்தது. பி.டி.ஓ.,க்கள் பாலசுப்ரமணி, ஷெல்டன், ஒன்றியக்குழு துணை தலைவர் அபிராமி முன்னிலை வகித்தனர். வேலம்பட்டி சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்ட விவாதம் வருமாறு:
ஜோதிபாசு (இந்திய கம்யூ.,): சுங்கச்சாவடியை அகற்ற தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். கே.ஆண்டிபாளையம் அங்கன்வாடிக்கு புது கட்டடம், கரட்டுப்பாளையம் அங்கன்வாடிக்கு கட்டட பராமரிப்பு செய்ய வேண்டும்.
தொங்குட்டிபாளையம், வடக்கு அவிநாசிபாளையம் ஊராட்சி பகுதிகளில் சாலை மேம்பாடு, கடகந்திருடிபாளையம், டி. ஆண்டிபாளையத்தில் குட்டை மேம்பாடு மற்றும் தடுப்பணை கட்ட வேண்டும். அத்திக்கடவு குடிநீர் முறையாக வழங்க வேண்டும். கரட்டுப்பாளையம், டி.ஆண்டிபாளையத்தில் மயான சுற்றுச்சுவர், கிருஷ்ணா புரத்திற்கு பஸ் வசதி வேண்டும்.
குமார் (தலைவர்): அங்கன்வாடி கட்டடத்துக்கு கலெக்டரிடம் சிறப்பு நிதி கேட்டுப் பெறலாம். முதல்வரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் பத்து கோடி ரூபாய்க்கு சாலை மேம்பாட்டு பணிகள் செய்யப்படுகிறது. 2024- -25ம் நிதியாண்டுக்கான, 15 வது நிதி குழு மானியம், 1.70 கோடி வந்துள்ளது. வளர்ச்சி பணி செய்ய, இத்தொகை அனைத்து கவுன்சிலர்களுக்கும் சரிசமமாக பங்கிட்டு தரப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

