ADDED : பிப் 16, 2025 02:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: 'ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை காலம் தாழ்த்தாமல் உடனடியாக முடிக்க வேண்டும்; இரண்டு நாட்கள் நடந்த பேச்சு வார்த்தை விபரங்களை முழுமையாக அரசு வெளியிட வேண்டும்.
ஏப்ரல், 1, 2023க்கு பின் பணியில் இணைந்த தொழிலாளர்களுக்கான தீர்வு குறித்து அறிவிப்பை அரசு தெரிவிக்க வேண்டும்,' என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் சார்பில், 'கேட் கூட்டம்' திருப்பூர் டிப்போ அலுவலகம் முன் நேற்று மாலை நடந்தது. சி.ஐ.டி.யு., மண்டல நிர்வாகிகள் பங்கேற்று, கோரிக்கையை விளக்கிப் பேசினர்.

