/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூர் தொழில் துறையினருக்கு மத்திய அமைச்சர் அழைப்பு
/
திருப்பூர் தொழில் துறையினருக்கு மத்திய அமைச்சர் அழைப்பு
திருப்பூர் தொழில் துறையினருக்கு மத்திய அமைச்சர் அழைப்பு
திருப்பூர் தொழில் துறையினருக்கு மத்திய அமைச்சர் அழைப்பு
UPDATED : ஜூலை 20, 2025 07:25 AM
ADDED : ஜூலை 20, 2025 06:50 AM

திருப்பூர் : திருப்பூரில் வசிக்கும் வடமாநில தொழிலாளர் குழந்தைகள், தங்களது தாய்மொழியில் கல்வி கற்க, மத்திய அரசு கூடுதல் நிதி ஆதாரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது, திருப்பூர் தொழில்துறையினரின் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.
மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஒடிசாவை சேர்ந்தவர்; ஒடிசாவில், தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள், தங்கள் மாநிலத்தில் தொழில் துவங்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். அனைத்து வளர்ந்த நாடுகளுக்கும் நட்பு நாடாக, நமது நாடு உருவெடுத்துள்ளது; பிரிட்டனுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் உருவாகியுள்ளது.
விரைவில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுடனும் வர்த்தக ஒப்பந்தம் உருவாகும். நமது நாட்டுக்கு பெரும் வர்த்தக வாய்ப்புகள் படையெடுக்க உள்ள நிலையில், தொழில் விரிவாக்கம் என்பது அத்தியாவசியம்.
அதன்மூலம், புதிய வாய்ப்புகளை சரிவர பயன்படுத்தி, வேலை வாய்ப்பு வழங்குவதுடன், வர்த்தக வாய்ப்புகளையும் நிரந்தரமாக்கி, நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த முடியும்.
திறன் பயிற்சி பெற்றவர்கள்
அமைச்சர் தர்மேந்திரபிரதான் பேசுகையில், ''ஆர்வமுள்ள இளம் தொழில்முனைவோர், ஒடிசாவில் தொழில் துவங்கலாம். மின்சலுகை, கட்டடம் என, அனைத்து வசதிகளுடன் தொழிற்சாலைகளை தயார் செய்துகொடுக்கிறோம்; சிறு முதலீட்டில் நிறுவனங்கள் தொழில் துவங்க முன்வரலாம். தொழிலாளர் வசதியும் தட்டுப்பாடின்றி கிடைக்கும்; புதிய கிளைகளை துவக்கவும், தேவையான முதலீட்டு மானியங்களை வழங்கவும், தயாராக இருக்கிறோம். திறன் பயிற்சி பெற்ற தொழிலாளர்களை திருப்பூர் அனுப்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
தாய்மொழியில் கல்வி
ஏற்றுமதியாளர்கள் சங்க துணை தலைவர் இளங்கோவன் பேசுகையில், ''வடமாநில தொழிலாளர்களில், ஓடிசாவை சேர்ந்தவர்கள் அதிகம் பேர் திருப்பூரில் உள்ளனர். அவர்களின், குழந்தைகள், தடையின்றி தாய்மொழிகளில் கற்க, மத்திய அரசு உதவ வேண்டும்,'' என்றார்.
விரைவில் ஒடிசா பயணம்
பொருளாளர் கோபாலகிருஷ்ணன் பேசுகையில், ''ஒடிசாவை சேர்ந்த மத்திய அமைச்சர், தொழில் துவங்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். தொழில் விரிவாக்கம் செய்ய விரும்புவோர், ஒடிசாவில் தொழில் துவங்கலாம்; தேவையான சலுகைகளும் கிடைக்கும். மத்திய அமைச்சர் அழைப்பை ஏற்று, விரைவில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகள் அடங்கிய குழு, விரைவில் ஒடிசா சென்று, இதுதொடர்பாக ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது,'' என்றார்.
ஒடிசா தொழிலாளர் மகிழ்ச்சி
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறுகையில், ''புது திருப்பூர் நேதாஜி அப்பேரல் பார்க்ஸ் வளாகத்துக்கு வந்திருந்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், கே.எம்., நிட்வேர் நிறுவனத்தில் பணியாற்றும், ஒடிசா உள்ளிட்ட வடமாநில தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார்.
ஒடிசா பெண் தொழிலாளர்கள், திருப்பூரில் மகிழ்ச்சியுடன் இருப்பதாக தெரிவித்தனர். தொழிலாளர் திறன் பயிற்சி, பசுமை சார் உற்பத்தி தொழில்நுட்பம் குறித்து, இணை நிர்வாக மேலாளர் விஷ்ணுபிரபுவிடம் கேட்டறிந்தார். உற்பத்தி படிநிலை மற்றும் சோலார் மின் உற்பத்தியை கேட்டு வியந்து பாராட்டியுள்ளார்,'' என்றார்.