/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'ஆர்ம்டெக்' மெஷின் வடிவமைப்பில் யுனிவர்செல் இன்ஜினியரிங் 'டாப்'
/
'ஆர்ம்டெக்' மெஷின் வடிவமைப்பில் யுனிவர்செல் இன்ஜினியரிங் 'டாப்'
'ஆர்ம்டெக்' மெஷின் வடிவமைப்பில் யுனிவர்செல் இன்ஜினியரிங் 'டாப்'
'ஆர்ம்டெக்' மெஷின் வடிவமைப்பில் யுனிவர்செல் இன்ஜினியரிங் 'டாப்'
ADDED : மார் 02, 2024 11:31 PM

திருப்பூர்:ஜெர்மன் தொழில்நுட்பத்துக்கு நிகராக, உள்ளூரிலேயே அற்புதமான 'ஆர்ம்டெக்' மெஷின்களை வடிவமைத்து, தொடர்சேவை அளிக்கிறது யுனிவர்சல் இன்ஜினியரிங்.
திருப்பூர், முதலிபாளையத்தில் இயங்கும், யுனிவர்சல் இன்ஜினியரிங் நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன் கூறியதாவது:
ஐரோப்பா தொழில்நுட்பத்தில், திருப்பூரிலேயே, 'ஆர்ம்டெக்' சென்டர் மெஷின் மற்றும் 'ஹீட்செட்டிங்' மெஷின்களை வடிவமைத்து கொடுக்கிறோம். இறக்குமதி செய்வதை காட்டிலும் குறைவாக, 40 சதவீத செலவில் மெஷின்களை வழங்குகிறோம். வாடிக்கையாளரின் இயக்க செலவும் வெகுவாக குறைகிறது.
உற்பத்தியிலும், தரத்திலும் முன்னோடியாக இருக்கிறது. எரிபொருள் மற்றும் மின்நுகர்வு செலவும் குறையும். 'ஆர்ம்டெக்' மெஷின் இயக்கத்தில் எவ்வித குழப்பமும் இல்லாத வகையிலும், எளிதாக கையாளும் வகையிலும் வடிவமைத்து கொடுக்கிறோம். துணிகளின் சுருக்கத்தை போக்க சரியான இயந்திரமாக வழங்குகிறோம்.
கடந்த இரண்டு ஆண்டு களில், திருப்பூரில் 10 மெஷின்களை வழங்கி, வெற்றிகரமாக இயக்கி வருகின்றனர். கடந்த, 2006 முதல் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில், புதிய 'ஆர்ம்டெக்' மெஷின்களை வடிவமைக்கிறோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

