/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மூணாறு ரோட்டில் ஆபத்தான பயண;ம் சாலையை மேம்படுத்த வலியுறுத்தல்
/
மூணாறு ரோட்டில் ஆபத்தான பயண;ம் சாலையை மேம்படுத்த வலியுறுத்தல்
மூணாறு ரோட்டில் ஆபத்தான பயண;ம் சாலையை மேம்படுத்த வலியுறுத்தல்
மூணாறு ரோட்டில் ஆபத்தான பயண;ம் சாலையை மேம்படுத்த வலியுறுத்தல்
ADDED : டிச 29, 2024 11:54 PM

உடுமலை; தமிழக, கேரள மாநிலங்களை இணைக்கும் மூணாறு பிரதான ரோட்டிலுள்ள, எஸ்-வளைவு மற்றும் ஆபத்தான சரிவு காரணமாக பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
உடுமலையில் இருந்து, கேரளா மாநிலம் மறையூர், மூணாறு செல்லும், இரு மாநிலங்களை இணைக்கும் ரோடு, மாநில நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் உள்ளது. மலைப்பகுதிகள் மற்றும் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த ரோடு குறுகலாகவும், ஆபத்தானதாகவும் மாறியுள்ளது.
தமிழக எல்லையில், உள்ள எஸ்-வளைவு பகுதி, ஆபத்தானதாகவும், மலைச்சரிவில், பாதுகாப்பு சுவர் இல்லாததாலும், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. நேற்று, நள்ளிரவு சென்ற சரக்கு லாரி, எஸ்.வளைவில் திரும்பும் போது, எதிர்பாராத விதமாக பள்ளத்தில் சரிந்தது.
டிரைவர் சாமார்த்தியமாக வாகனத்தை நிறுத்தியதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து, நேற்று காலை, 10:00 மணி வரை, 8 மணி நேரம் போராடி, லாரி மீட்கப்பட்டது. இதனால், இந்த ரோட்டில், இரு புறமும் வாகனங்கள் காத்திருந்தன.
அதே போல், கடந்த வாரம் சுற்றுலா பயணியர் சென்ற பஸ் உட்பட, கடந்த ஒரு மாதத்தில், 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் இப்பகுதியில் விபத்துக்குள்ளாகி போக்குவரத்து பாதித்தது. இந்த வளைவை நேர் செய்யும் வகையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், இரு ஆண்டுக்கு முன் ஆய்வு செய்து, திட்ட மதிப்பீடும் தயாரிக்கப்பட்டது. ஆனால், பணி மேற்கொள்ளாததால், தொடர்ந்து ஆபத்தான ரோடாக மாறியுள்ளது.
இரு மாநிலங்களை இணைக்கும் பிரதான ரோடாகவும், சுற்றுலா வாகனங்கள், பொது போக்குவரத்து, சரக்கு வாகனங்கள் என போக்குவரத்து அதிகம் உள்ள இந்த ரோட்டை விரிவாக்கம் செய்து, ரோட்டோரங்களிலுள்ள மிகப்பெரிய பள்ளங்களை சரி செய்யவும், எஸ்-வளைவு பகுதியை மேம்படுத்தவும் வேண்டும், தடுப்புகள் அமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

