/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'ஆர்டர்' எதிர்பார்ப்புடன் பாத்திர உற்பத்தியாளர்கள்
/
'ஆர்டர்' எதிர்பார்ப்புடன் பாத்திர உற்பத்தியாளர்கள்
'ஆர்டர்' எதிர்பார்ப்புடன் பாத்திர உற்பத்தியாளர்கள்
'ஆர்டர்' எதிர்பார்ப்புடன் பாத்திர உற்பத்தியாளர்கள்
ADDED : டிச 16, 2024 12:30 AM
அனுப்பர்பாளையம்; அனுப்பர்பாளையம், 15 வேலம்பாளையம், அங்கேரிபாளையம், ஆத்துப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், 250க்கும் மேற்பட்ட பாத்திர உற்பத்தி பட்டறைகள் இயங்கி வருகின்றன.
பட்டறைகளில், எவர்சில்வர், பித்தளை, செம்பு ஆகிய உலோகங்களில் பாத்திரம் உற்பத்தி செய்யப்படுகிறது. பொங்கல் பண்டிகை மற்றும் திருமண சீசன் தொடங்க உள்ள நிலையில் பாத்திர ஆர்டருக்காக எதிர்பார்ப்பில் உற்பத்தியாளர்கள் உள்ளனர்.
பாத்திர உற்பத்தியாளர்கள் கூறியதாவது:
தற்போது, பாத்திர உற்பத்தி முன்னர்போல் இல்லை. பாத்திரத்துக்கு மாற்றாக பிளாஸ்டிக், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வரத்தால், பாத்திர உற்பத்தி பெரும் மந்த நிலையில் உள்ளது. பொங்கல் பண்டிகை, திருமணங்கள், கோவில் விழாக்கள் போன்ற சீசன் விழாக்களை நம்பி உள்ளோம்.
அடுத்த மாதம், பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், பொங்கல் பானை உற்பத்திக்கான ஆர்டர் மெதுவாக வர துவங்கி உள்ளது. ஆனால், தொடர் மழையால், கடந்த ஆண்டைக் காட்டிலும், ஆர்டர் மந்த நிலையில்தான் உள்ளது.
அடுத்ததாக தை, மாசி, பங்குனி, வைகாசி, ஆனி, ஆவணி உள்ளிட்ட மாதங்கள் திருமண மாதங்களாகும். திருமணத்தின்போது, என்னதான் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வந்தாலும், பாரம்பரியமாக சீர் வரிசையாக பானை, குடம், தட்டு என பாத்திர வகைகளை கொடுப்பது வழக்கம்.
திருமண மாதங்கள் தொடங்க உள்ள நிலையில் அதற்கான பாத்திர ஆர்டர் வரும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.