/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பைக் மீது வேன் மோதல்; இருவர் பரிதாப பலி
/
பைக் மீது வேன் மோதல்; இருவர் பரிதாப பலி
ADDED : பிப் 13, 2025 10:08 PM
உடுமலை; உடுமலை அருகே பெரியபட்டியில் இருந்து தென்னை மட்டைகளை ஏற்றிய, 'ஈச்சர்' வேன் பழநி அத்திமரவலசைச்சேர்ந்த, கனகராஜ், 36; என்பவர் நேற்று மாலை ஓட்டி வந்துள்ளார்.
வேன், உடுமலை - பல்லடம் மாநில நெடுஞ்சாலையில், குடிமங்கலம் அருகே வந்த போது, எதிரே வந்த பைக் மீது மோதியது.
இதில், பைக்கில் பயணித்த, எஸ்.வல்லக்குண்டாபுரத்தை சேர்ந்த சதீஷ்குமார், 30; அதே கிராமத்தைச்சேர்ந்த சக்திவேல், 33 ஆகியோருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற குடிமங்கலம் போலீசார், வழக்குப்பதிவு செய்து, கனகராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.