/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அதிக வேகம் தந்த விபத்து நிலை தடுமாறி கவிழ்ந்த வேன்
/
அதிக வேகம் தந்த விபத்து நிலை தடுமாறி கவிழ்ந்த வேன்
அதிக வேகம் தந்த விபத்து நிலை தடுமாறி கவிழ்ந்த வேன்
அதிக வேகம் தந்த விபத்து நிலை தடுமாறி கவிழ்ந்த வேன்
ADDED : மார் 05, 2024 01:20 AM

அவிநாசி;அவிநாசி அருகே அதிக வேகத்தில் வந்த வேன் நிலை தடுமாறி கவிழ்ந்தது. சத்தி, புளியம்பட்டி, கோபி, நம்பியூர் ஆகிய பகுதிகளிலிருந்து திருப்பூர் பனியன் நிறுவனங்களுக்கு தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் மினி வேன், பஸ் மற்றும் சரக்கு வாகனங்களால், என எந்நேரமும் போக்குவரத்து நெருக்கடியான சாலையாக உள்ளது. நேற்று மதியம் சேவூரில் இருந்து அவிநாசி நோக்கி வந்து கொண்டிருந்த பனியன் நிறுவன வேன் அதிவேகமாக வந்ததில் நிலை தடுமாறி கவிழ்ந்தது.
இது குறித்து அப்பகுதியினர் கூறுகையில், 'சேவூர் பகுதியில், டிவைடர்கள் மற்றும் வேகத்தடையும் அகற்றப்பட்டது. இதனாலேயே, அவிநாசி நோக்கி செல்லும் வாகனங்கள் கட்டுக்கடங்காத வேகத்தில் செல்வதால் நாள்தோறும் விபத்து ஏற்படுகிறது. உடனடியாக போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து விபத்துக்கள் ஏற்படும் பகுதிகளில் டிவைடர்கள் மற்றும் வேகத்தடை அமைக்க வேண்டும்,' என்றனர்.

