UPDATED : நவ 21, 2026 06:26 PM
ADDED : நவ 21, 2026 06:26 PM
திருப்பூர்: பனிப்பொழிவு தொடங்கியுள்ளதால், சந்தைக்கு பந்தல் காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. இதனால், நடப்பு வாரத்தில் அவற்றின் விலை உயர்ந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் மழை குறைந்து இயல்பு நிலை திரும்பியுள்ளது. பனிப்பொழிவு இருந்தாலும் மலைக்காய்கறிகள் வரத்து ஓரளவு சீரடைந்துள்ளது. இதனால், கேரட் கிலோ ரூ.40, பீன்ஸ் ரூ.70, பீட்ரூட் ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டது.
அதேநேரம், நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் நிலவும் கடும் பனிப்பொழிவால் பாகற்காய், புடலங்காய், பீர்க்கங்காய், அவரை உள்ளிட்ட பந்தல் காய்கறிகளின் வரத்து சந்தைக்கு கணிசமாகக் குறைந்துள்ளது. இரவு முழுவதும் பனிப்பொழிவும், அதைத் தொடர்ந்து வெயிலும் நிலவுவதால், பந்தல் காய்கறிகளின் பூக்கள் மற்றும் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளன.
வரத்து குறைந்ததால் விலை சற்று உயர்ந்துள்ளது. நேற்று புடலங்காய் கிலோவுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.50-க்கு விற்பனையானது. பீர்க்கங்காய் ரூ.60, பாகற்காய் ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தெற்கு உழவர் சந்தையில் நேற்று விற்பனையான காய்கறிகளின் விலை விவரம் (கிலோ ஒன்றுக்கு ரூபாயில்):
கத்தரிக்காய் – 40 முதல் 70 வரை, வெண்டைக்காய் – 60, தக்காளி – 30, பச்சை மிளகாய் – 40, புடலங்காய் – 50, அவரை – 80, கொத்தவரை – 40, பீர்க்கங்காய் – 60, சுரைக்காய் – 20, பாகற்காய் – 70, முள்ளங்கி – 40, எலுமிச்சை – 180, பெரிய வெங்காயம் – 50, சின்ன வெங்காயம் – 140, உருளைக்கிழங்கு – 35 முதல் 60 வரை, முட்டைக்கோஸ் – 20, கேரட் – 40 ரூபாய்.
