/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பொங்கல் பண்டிகைக்கு காய்கறி விற்பனை ஜோர்
/
பொங்கல் பண்டிகைக்கு காய்கறி விற்பனை ஜோர்
ADDED : ஜன 14, 2025 01:40 AM

உடுமலை,; உடுமலை பகுதிகளில், நேற்று, பொங்கல் பண்டிகைக்கு தேவையான, பொருட்கள் வாங்க, உடுமலை, ராஜேந்திரா ரோடு, சீனிவாசா வீதி, பஸ் ஸ்டாண்ட், கல்பனா ரோடு என பெரும்பாலான கடைவீதிகளில் பொதுமக்கள் திரண்டனர்.
கிராம மக்கள், பொங்கல் பொருட்கள், காய்கறிகள் மற்றும் புத்தாடைகள் வாங்கவும், முழுக்கரும்பு, பொங்கல் பானையில் கட்ட மஞ்சள் கொத்து மற்றும் பூ, மாலைகள், வண்ண கலர் கோலப்பொடிகள், மாடுகளுக்கு புதிதாக அணிவிக்க கழுத்து கயிறு, மூக்கணாங்கயிறு, பிடி கயிறு என கால்நடைகளுக்கு தேவையான பொருட்கள் வாங்கி சென்றர். இதனால், அவற்றின் விற்பனை கனஜோராக நடந்தது.
பொங்கல் பண்டிகையின் போது, அதிகளவு காய்கறிகளுடன் உணவு தயாரித்து, வழிபாடு நடத்தும் பாரம்பரியம் உள்ளது.
இதற்காக, காய்கறிகளின் விற்பனையும் அமோகமாக நடந்தது.
மொத்த காய்கறி சந்தையில், கத்தரி ஒரு கிலோ, ரூ. 10 முதல், 14 வரையும், முள்ளங்கி 9-10; காலிப்பிளவர் 9-11; வெண்டை -- 30; அவரை -- 70; கேரட் -- 80; முட்டை கோஸ் - 20, பச்சை மிளகாய் - 40, தக்காளி, 10-12; அரசாணிக்காய், 8 -- 10 ரூபாய்க்கு விற்பனையானது.