UPDATED : நவ 19, 2026 05:00 PM
ADDED : நவ 19, 2026 05:00 PM

மடத்துக்குளம்: மடத்துக்குளம் அருகேயுள்ள சோழமாதேவியில், வாணவராயர் வேளாண் கல்லூரியின் ஊரக வேளாண் பணி அனுபவத்திட்டத்தின் கீழ், கல்லுாரி மாணவியர், கால்நடைத்துறை டாக்டர்கள் பங்கேற்ற, கால்நடை மருத்துவம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
இம்முகாமில், கால்நடை மருத்துவர்கள் பங்கேற்று, கால்நடை வளர்ப்போருக்கு, மாடுகளைப் பாதிக்கும் மடிநோய், வெறி நாய்க்கடி நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கினர்.
மேலும், கோழிகளைப் பாதிக்கும் பொதுவான நோய்கள், அவற்றின் அறிகுறிகள், நோய்த்தடுப்பு முறைகள் மற்றும் முறையான பராமரிப்பு குறித்தும் விளக்கினர்.
கால்நடை வளர்ப்பில், கால்நடைகளின் ஆரோக்கியத்தை பேண, மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள், நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல் மற்றும் உரிய காலத்தில் கால்நடை மருத்துவரை அணுகுதல் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்தும், விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில், வாணவராயர் வேளாண்மை கல்லூரியைச்சேர்ந்த வேளாண் இறுதியாண்டு மாணவிகள் அஞ்சிமா, திவ்யஸ்ரீ, ஜான்சிராணி, மகாலட்சுமி, பிரனிதா, ரியா, செல்வபாண்டி, சுபரஞ்சனி, சூர்யபிரபா, வித்யா ஆகியோர் பங்கேற்று, கிராமப்புற கால்நடை வளர்ப்போரிடம் கலந்துரையாடினர்
