/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வித்ய விகாசினி பள்ளி100 சதவீதம் தேர்ச்சி
/
வித்ய விகாசினி பள்ளி100 சதவீதம் தேர்ச்சி
ADDED : மே 18, 2025 01:00 AM
திருப்பூர்: திருப்பூர், காங்கயம் ரோடு, ஜெய் நகரில் வித்ய விகாசினி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி செயல்படுகிறது. பத்தாம் வகுப்பு பொது தேர்வெழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளி 100 சதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
பள்ளி மாணவர் ரோஹித் 495 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றார். மித்ரா 494 மதிப்பெண்ணுடன் இரண்டாமிடமும், பூவிகா 492 மதிப்பெண்ணுடன் மூன்றாமிடமும் பெற்றனர். ஸ்ரீநிதி 491; தேவசுருதி 490 மதிப்பெண்ணும் பெற்றனர்.
தேர்வெழுதிய மாணவர்களில், அறிவியலில் 5 பேர்; சமூக அறிவியலில் 6 பேர் 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.ேமலும், தமிழ் பாடத்தில் 2 பேர்; ஆங்கிலம் 8 பேர்; கணிதம் 4 பேர்; அறிவியலில் 6 பேர்; சமூக அறிவியலில் 10 பேர் 99 மதிப்பெண் பெற்றனர். அதே போல் தமிழ் பாடம் 3 பேர்; ஆங்கிலம் 7; கணிதம் 5; அறிவியல் 10 மற்றும் சமூக அறிவியலில் 5 பேர் 98 மதிப்பெண் பெற்றனர்.
இப்பள்ளி மாணவர்கள் 5 பேர் 490க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். மேலும் 9 பேர் 480 க்கு மேலும்; 17 பேர் 470க்கு மேலும், 15 பேர் 460க்கு மேல்; 8 பேர் 450க்கு மேல், 54 பேர் 400க்கு மேலும் மதிப்பெண் பெற்றனர்.பள்ளியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களை, பள்ளி தாளாளர் தர்மலிங்கம், நிர்வாக அதிகாரி விஜயலட்சுமி, செயலாளர் நகுலன் ப்ரணவ், பள்ளி முதல்வர் அன்பரசு, துணை முதல்வர் ஈஸ்வரி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.