/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'வீர தீர சூரன்' விக்ரம்; ரசிகர்கள் உற்சாகம்
/
'வீர தீர சூரன்' விக்ரம்; ரசிகர்கள் உற்சாகம்
ADDED : ஏப் 05, 2025 05:49 AM

சினிமா... திருப்பூர் மக்களுக்கான ஒரே பொழுதுபோக்கு. அதுவும், காலை முதல் மாலை வரை ஓடி உழைத்து, களைத்து, வார இறுதி நாளில், இரவு சினிமா காட்சிக்கு வருவ தென்பது, பலருக்கும் மகிழ்ச்சியை தரும் ஒரு விஷயம்.
அதுவும், தாங்கள் விரும்பும் ஹீரோவின் சினிமாவை பார்த்து ரசிப்பதில் கூடுதல் குஷி. திரையில் பிரமிக்க வைக்கும் ஹீரோ, நிஜத்தில் தோன்றினால்...ரசிகர்கள் துள்ளி குதித்து விட மாட்டார்களா!அப்படியான ஒரு ஆச்சர்ய சந்தோஷத்தை தான், திருப்பூரில் உள்ள தன் ரசிகர்களுக்கு வழங்கினார் 'சீயான்' விக்ரம்.
அவரது நடிப்பில் அருண்குமார் இயக்கியிருக்கும், 'வீர தீர சூரன்' பார்ட் - 2 கடந்த மாதம், 27ல் வெளியானது. அவருடன் எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன், சுராஜ் வெஞ்சரமுடு என, பிரபல நடிகர்கள் நடித்திருக்கின்றனர்.
திருப்பூரில் உள்ள ஒரு தியேட்டரில் திரையிடப்பட்டிருந்த நிலையில் தான் இரவு காட்சியின் போது, நடிகர் விக்ரம் வந்தார். ரசிகர்களுடன் பேசினார்.
அவர் நடித்த சினிமாக்களால் அவர் பேசிய வசனங்களை ரசிகர்கள் பேசிக் காண்பிக்க சொல்ல, தயங்காமல் செய்தனர்.
'நீண்ட இடைவெளிக்கு பின் கமர்ஷியல் படம் செய்துள்ளேன்; பார்த்து ரசியுங்கள்,' எனக்கூறி சென்றார்.