/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஒருவழிப்பாதையில் விதிமீறல்கள் சகஜம்
/
ஒருவழிப்பாதையில் விதிமீறல்கள் சகஜம்
ADDED : ஆக 03, 2025 11:40 PM

திருப்பூர்:
திருப்பூருக்குள் இயக்கப்படும் லட்சக்கணக்கான வாகனங்கள், 10 கி.மீ., சுற்றளவில் உள்ள பிரதான மற்றும் சிறிய ரோடுகளில் இயக்கப்படுகிறது.
அதிகளவிலான வாகனப் போக்குவரத்து காரணமாக நகர ரோடுகள் பெரும்பாலும் வாகன நெரிசலுடன் காணப்படுகிறது. இதற்காக போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் வகையில், போலீசார் முக்கிய இடங்களில் போக்குவரத்து சிக்னல் அமைத்துள்ளனர். போக்குவரத்து போலீசார் பணியமர்த்தப்பட்டும் உள்ளனர்.
மேலும், நோ பார்க்கிங், ஒன்வே, நோ என்ட்ரி, நோ யு டர்ன், நோ ரைட் டர்ன், வேக கட்டுப்பாடு, கனரக வாகனங்களுக்கு நேரம் உள்ளிட்ட சில விதிமுறைகளையும் அமல்படுத்தியுள்ளனர்.
பெரும்பாலான விதிகளை வாகன ஓட்டிகள் பலர் கண்டு கொள்வதில்லை. முக்கியமாக 'நோ பார்க்கிங்' குறித்து வாகன ஓட்டிகள் அலட்டிக் கொள்ளாமல் இஷ்டம் போல் நிறுத்துவது பல இடங்களிலும் காணப்படுகிறது. இதனால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
அதே போல், நோ என்ட்ரி நடைமுறையில் உள்ள ரோடுகளில் அதை மீறி செல்லும் வாகனங்கள் விபத்துக்கு காரணமாகிறது. பிரதான ரோடுகளில் ஒன் வே பாதையில் எதிர் திசையில் செல்லும் வாகனங்களால் மற்ற வாகனங்களும் விபத்துக்குள்ளாவது தவிர்க்க முடியாததாக உள்ளது. விதிமுறை மீறல்கள் குறித்து போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வாகன ஓட்டிகளும் போக்குவரத்து விதியை பின்பற்ற வேண்டும்.