/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விருட்சம் அறக்கட்டளை நர்சரி துவக்க விழா
/
விருட்சம் அறக்கட்டளை நர்சரி துவக்க விழா
ADDED : ஜூலை 29, 2025 11:36 PM

திருப்பூர்; வனத்துக்குள் திருப்பூர் திட்ட குழுவுடன் இணைந்து, பசுமை பணியை மேற்கொள்ள, வெள்ளகோவிலில் விருட்சம் அறக்கட்டளை துவக்கப்பட்டுள்ளது.
'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், வெள்ள கோவில் உட்பட, மாவட்டம் முழுவதும், மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்படுகிறது. வெள்ளகோவில் பகுதியில், நிழல்கள் அமைப்புடன் இணைந்து மேற்கொண்டனர். தற்போது, விருட்சம் என்ற அறக்கட்டளை துவக்கப்பட்டுள்ளது.
விருட்சம் அறக்கட்டளை மற்றும் விருட்சம் நர்சரி துவக்க விழா நடந்தது. கேத்தனுார் இயற்கை விவசாயி பழனிசாமி, அறக்கட்டளை மற்றும் நர்சரியை துவக்கி வைத்தார். 'வனத்துக்குள் திருப்பூர் திட்டக்குழுவினர், விருட்சம் அறக்கட்டளையினர் பங்கேற்றனர்.
மரம் வளர்க்க விரும்பும் மக்களுக்கு, இலவசமாக மரக்கன்றுகள் உற்பத்தி செய்து கொடுக்கப்படும். ராஜமுந்திரியில் இருப்பது போல், நன்கு வளர்ந்த மரக்கன்றுகள், மிகக்குறைந்த விலைக்கு வழங்கப்படுமென, விருட்சம் அறக்கட்டளையினர் தெரிவித்தனர்.