/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மூளிக்குளம் தடுப்பணையில் நீர்க்கசிவு
/
மூளிக்குளம் தடுப்பணையில் நீர்க்கசிவு
ADDED : அக் 25, 2024 10:50 PM

திருப்பூர்: மூளிக்குளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணையில் தண்ணீர் கசிகிறது.
திருப்பூர் ஊத்துக்குளி ரோடு, பாரப்பாளையம் அருகே மூளிக்குளம், 26 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. அணைக்காடு தடுப்பணையில் இருந்து குளத்துக்கு தண்ணீர் வழங்கும் ராஜவாய்க்கால், 2.50 கி.மீ., நீளம் செல்கிறது. பொதுப்பணித்துறை கண்காணிப்பில் இக்குளம் உள்ளது. இக்குளத்தையொட்டி, சிறிய தடுப்பணை அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த தடுப்பணையின் அடிப்பகுதியில் தண்ணீர் கசிகிறது.பொதுமக்கள் கூறுகையில், 'பெருமழை சமயங்களில் தான், அணைகள் மற்றும் நீர்நிலைகளின் நிலை தெரிய வருகிறது. சமீபத்தில் பெய்த மழையில், மூளிக்குளம் அணை நிரம்பியிருக்கிறது. அணையில் இருந்து வெளியேறும் உபரிநீர், வெள்ளப் பெருக்கிற்கு காரணமாகிவிடக்கூடாது என்பதற்காக தான், தடுப்பணை கட்டப்படுகிறது. ஆனால், தடுப்பணையின் அடிப்பகுதியில் மண்ணரிப்பு ஏற்பட்டு, நீர் கசிகிறது. இது, தடுப்பணை கட்டுமான தரத்தின் மீது, சந்தேகம் ஏற்படுத்துவதாக இருக்கிறது,' என்றனர்.