sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நொய்யலில் நீர் மாதிரி சேகரிப்பு; சாய ஆலைகளுக்கு எச்சரிக்கை

/

நொய்யலில் நீர் மாதிரி சேகரிப்பு; சாய ஆலைகளுக்கு எச்சரிக்கை

நொய்யலில் நீர் மாதிரி சேகரிப்பு; சாய ஆலைகளுக்கு எச்சரிக்கை

நொய்யலில் நீர் மாதிரி சேகரிப்பு; சாய ஆலைகளுக்கு எச்சரிக்கை


ADDED : அக் 11, 2024 11:48 PM

Google News

ADDED : அக் 11, 2024 11:48 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : பருவமழைக்காலம் துவங்கியுள்ளதையடுத்து, திருப்பூர் பகுதி சாய ஆலைகள், சுத்திகரிப்பு மையங்களுக்கு மாசுகட்டுப்பாடு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

திருப்பூரில் மொத்தம் 553 சாய ஆலைகள் உள்ளன. இவற்றில், 452 ஆலைகள், 18 சாயக்கழிவுநீர் பொது சுத்திகரிப்பு மையங்களை சார்ந்து இயங்குகின்றன. சாய ஆலைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர், குழாய் மூலம், பொது சுத்திகரிப்பு மையங்களுக்கு கொண்டுவரப்பட்டு, ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்பத்தில் சுத்திகரிக்கப்படுகிறது. இவைதவிர, சுத்திகரிப்பு கட்டமைப்புகளை உள்ளடக்கிய 101 சாய ஆலைகள் இயங்குகின்றன.

சாய ஆலைகளின் இயக்கத்தை மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்துவருகின்றனர். வாரியத்தில் அனுமதி பெறாத முறைகேடு சாய ஆலைகள் மட்டுமின்றி, அனுமதி பெற்ற சாய ஆலைகளிலிருந்தும் கூட, சில நேரங்களில், சாயக்கழிவுநீர் வெளியேறி நீர் நிலைகளில் கலக்க வாய்ப்பு உள்ளது.

வடகிழக்கு பருவமழை காலம் துவங்கியுள்ளதையடுத்து, திருப்பூர், கோவை மாவட்டங்களில் தொடர் மழை பெய்துவருகிறது. இதனால், திருப்பூர் நொய்யலாற்றில் வழக்கத்தைவிட அதிக வெள்ளம் ஓடுகிறது. இதையடுத்து, மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் குழுவினர், நொய்யலாற்றில் ஆங்காங்கே நீர் மாதிரி சேகரித்து, டி.டி.எஸ்., அளவுகளை பரிசோதித்துவருகின்றனர்.

கடந்த இரண்டு நாட்களாக ஆற்றில் சாயக்கழிவுநீரை திறந்துவிட்ட நிறுவனத்தை அடையாளம் காண கள ஆய்வுகள் மேற்கொண்டுவருகின்றனர். இந்நிலையில், சாய ஆலைகள், பொது சுத்திகரிப்பு மையங்களுக்கு மாசுகட்டுப்பாடு வாரியம் சார்பில், எச்சரிக்கை சுற்றறிக்கை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

----

நொய்யல் ஆற்றில், நீர் மாதிரியை சேகரிக்கும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தினர்.

விதிமீறல் கண்டறிந்தால் நடவடிக்கை

மழைக்காலம் துவங்கியதையடுத்து, நொய்யலாற்றை தொடர்ந்து கண்காணித்துவருகிறோம். மழைநீர் வருகை அதிகரிப்பால், ஆற்றில் பெரும்பாலான இடங்களில், டி.டி.எஸ்., (கரைந்துள்ள மொத்த உப்புக்களின் அளவு) 800 - 900 அளவுக்குள்ளாகவே இருக்கிறது. சாய ஆலைகள், பொது சுத்திகரிப்பு மையங்களுக்கு, மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாயக்கழிவிலிருந்து பிரித்தெடுக்கப்படும் கழிவு உப்புக்களை, கட்டாயம் மேற்கூரை மற்றும் தளம் அமைக்கப்பட்ட குடோன்களில், மழை நீர் புகாதவாறு வைக்கவேண்டும். சாயக்கழிவுநீர் தேக்க தொட்டிகளில் கசிவு இருக்க கூடாது; மழை நீர் நிரம்பி, சாயக்கழிவுநீர் நிரம்பி வழிந்து வெளியேறிவிடக்கூடாது. மழைால் வெள்ளப்பெருக்குகள் ஏற்பட்டாலும்கூட, தெரிந்தோ, தெரியாமலோ எந்தவகையிலும், சாய ஆலைகள், சுத்திகரிப்பு மையங்களிலிருந்து, சாயக்கழிவுநீர் வெளியேறாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். சாய ஆலை விதிமீறல்கள் குறித்து தெரிந்தால் தகவல் தெரிவிக்குமாறு, மாநகராட்சி மண்டல அலுவலகங்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளோம். விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட சாய ஆலை, சுத்திகரிப்பு மையம் மீது நடவடிக்கை எடுக்கப்படும். - செந்தில்குமார், மாவட்ட பொறியாளர்(வடக்கு), மாசுக்கட்டுப்பாடு வாரியம்.








      Dinamalar
      Follow us