/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மயானத்தில் ஊறும் தண்ணீர் உடல் அடக்கம் செய்ய சிரமம்
/
மயானத்தில் ஊறும் தண்ணீர் உடல் அடக்கம் செய்ய சிரமம்
மயானத்தில் ஊறும் தண்ணீர் உடல் அடக்கம் செய்ய சிரமம்
மயானத்தில் ஊறும் தண்ணீர் உடல் அடக்கம் செய்ய சிரமம்
ADDED : ஏப் 12, 2025 11:19 PM

ஊத்துக்குளி: ஊத்துக்குளி அருகே செங்கப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட சென்னிமலைபாளையத்தில் ஏராளமான மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
அதே ஊரில் உள்ள ஒரு சமுதாயத்தை சேர்ந்த மக்கள் தங்கள் பயன்படுத்தி வரும் மயானத்தில் ஏற்படும் ஊற்று நீரால் இறுதி சடங்கை மேற்கொள்ள முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் இறந்த ஒருவரின் சடலத்தை அடக்கம் செய்ய எடுத்து சென்றனர். அங்கு ஒரு சில அடி குழி தோண்டியதும், ஊற்று நீர் வெளியேறியது.
தொடர்ந்து, அந்த நீரை அறையும், குறையுமாக வெளியேற்றி விட்டு, அதே குழியில் சடலத்தை அடக்கம் செய்தனர். மயானத்தில் நீண்ட காலமாக இப்பிரச்னை இருந்து வருகிறது.
அருகே உள்ள குட்டையையொட்டி அமைந்துள்ள மயானத்தில் மண் கொட்டி, குட்டையை விட மேடாக உயர்த்தி தர வேண்டும். அருகில் இருக்கும் குட்டையை கான்கிரீட் சுவர் அமைத்து தர வேண்டும் என அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.
அதே ஊரில் அமைந்துள்ள மின் மயானமும் முறையாக பராமரிக்கப்படாமல் பெயரளவில் உள்ளது. அதையும் முறையாக பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.