/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குடிநீர் இணைப்பு; 5 ஆண்டாக தாமதம்
/
குடிநீர் இணைப்பு; 5 ஆண்டாக தாமதம்
ADDED : ஏப் 18, 2025 11:50 PM

அவிநாசி: புதிய குடிநீர் இணைப்பு கேட்டு, பணம் கட்டியும் ஐந்து ஆண்டுகளாக இணைப்பு தராததால், பொன் சோழீஸ்வரர் கோவில் பகுதி பொதுமக்கள் பி.டி.ஓ.,விடம் மனு அளித்தனர்.
அவிநாசி ஒன்றியம், பழங்கரை ஊராட்சி, பொன்சோழீஸ்வரர் கோவில் எதிரில் உள்ள பகுதியில், 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில், ஆழ்துளை கிணறு அமைத்து, மேல்நிலைத் தொட்டி கட்டி அதற்கு மின் இணைப்பும் கொடுத்து இரண்டு ஆண்டு ஆகிறது. இந்நிலையில், 2021ல், புதிய குடிநீர் இணைப்பு வேண்டுவோர் ஊராட்சியில் பணம் கட்டி புதிய இணைப்பைப் பெற்றுக் கொள்ள அறிவித்துள்ளனர்.
ஏராளமானோர், பழங்கரை ஊராட்சியில் புதிய குடிநீர் இணைப்புக்காக கட்டியுள்ளனர். ஆனால், இதுவரை குடிநீர் குழாய் இணைப்புகள் தரவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த பொதுமக்கள், நேற்று அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், பி.டி.ஓ.,(கிராமம்) விஜயகுமாரிடம் மனு அளித்தனர்.
பி.டி.ஓ., கூறுகையில், ''புதிய குடிநீர் இணைப்புகள் அனைத்து பகுதிகளுக்கும் கொடுக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி பதிவு செய்த முன்னுரிமை படி இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. விரைவில், பழங்கரை ஊராட்சி, பொன் சோழீஸ்வரர் கோவில் எதிரிலுள்ள மக்களுக்கும் குடிநீர் இணைப்பு கண்டிப்பாக வழங்கப்படும்,' என்றார்.

