/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வரி செலுத்தாத வீடுகளில் குடிநீர் 'கட்'
/
வரி செலுத்தாத வீடுகளில் குடிநீர் 'கட்'
ADDED : ஏப் 29, 2025 09:19 PM

உடுமலை; கணக்கம்பாளையம் ஊராட்சியில், வரி செலுத்தாத குடியிருப்புகளில், குடிநீர் இணைப்பு துண்டிக்கும் நடவடிக்கையில், ஊராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
உடுமலை ஒன்றியத்தில், கணக்கம்பாளையம் ஊராட்சி மக்கள் தொகை அதிகமுள்ளதாகவும், நகரின் எல்லையையொட்டி உள்ள பகுதியாகவும் உள்ளது.
ஊராட்சியில் குடிநீர் வரி, வீட்டுவரி பல மாதங்களாக கட்டாமல் இருப்பவர்களுக்கு, பல்வேறு வழிகளிலும் ஊராட்சி நிர்வாகத்தின் வாயிலாக, எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஆட்டோ விளம்பரம், தனி நபர் நோட்டீஸ் வழங்குவது, சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. ஊராட்சி நிர்வாகத்தின் எச்சரிக்கையை கண்டுகொள்ளாமல், தொடர்ந்து பல ஆண்டுகளாக வரி செலுத்தாமல் இருந்த குடியிருப்புகள் குறித்து, ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் முதற்கட்டமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த குடியிருப்புகளில், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என பலமுறை அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், ஊராட்சி நிர்வாகம் வரி செலுத்தாதோர் வீடுகளில் குடிநீர் இணைப்பை துண்டிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
முதற்கட்டமாக ஸ்ரீராம் நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளில், வரி செலுத்தாதவர்களின் வீடுகளில், குடிநீர் குழாய் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இந்த நடவடிக்கையில், ஊராட்சி நிர்வாகத்தினர் மற்றும் ஒன்றிய நிர்வாக அலுவலர்கள் பங்கேற்றனர்.
மேலும், வரி செலுத்தாத வீடுகளில், இந்த நடவடிக்கை தொடரும் எனவும், ஊராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.