/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'மாவட்ட போட்டிகளை சிறப்பாக நடத்தணும்!'
/
'மாவட்ட போட்டிகளை சிறப்பாக நடத்தணும்!'
ADDED : செப் 24, 2025 11:57 PM

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட அளவிலான போட்டிகளை நடத்துவது தொடர்பாக, திருப்பூர் வருவாய் மாவட்ட அளவிலான கூட்டம், நஞ்சப்பா மாநகராட்சி பள்ளியில் நடந்தது.
நஞ்சப்பா நகராட்சி பள்ளியின் உடற்கல்வி இயக்குனர் நடராஜ், வரவேற்றார். உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன், தலைமை வகித்து பேசுகையில், 'குறுவட்ட போட்டிகள் நடத்திய அனைத்து குறுவட்ட செயலர்கள், கண்காணிப்புக்குழு உறுப்பினர்களுக்கு பாராட்டு தெரிவித்த அவர், மாவட்ட போட்டிகளை எவ்வித குழப்பங்களுக்கும் இடம் கொடுக்காமல், சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும்' என்றார். நஞ்சப்பா பள்ளி தலைமையாசிரியர் கர்னல், பேசினார். பின், மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்தப்படும் இடம், நாள் குறித்தும் முடிவெடுக்கப்பட்டது.