/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அமெரிக்க பொருட்களை தவிர்ப்போம்: உறுதிமொழியேற்ற வணிகர்கள்
/
அமெரிக்க பொருட்களை தவிர்ப்போம்: உறுதிமொழியேற்ற வணிகர்கள்
அமெரிக்க பொருட்களை தவிர்ப்போம்: உறுதிமொழியேற்ற வணிகர்கள்
அமெரிக்க பொருட்களை தவிர்ப்போம்: உறுதிமொழியேற்ற வணிகர்கள்
ADDED : செப் 05, 2025 11:41 PM

பல்லடம்:
பல்லடம் அனைத்து வணிகர் சங்க பேரமைப்பின் சார்பில், வ.உ.சி., பிறந்தநாள் விழா தினசரி மார்க்கெட் வளாகத்தில் நேற்று நடந்தது.
மதசார்பற்ற ஜனதா தளத்தின் மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், ஹிந்து பரிவார் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சாய் குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேரமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை தலைமை வகித்து பேசுகையில், ''அமெரிக்க தயாரிப்பு பொருட்களை புறக்கணிக்கும் விதமாக, வ.உ.சி., பிறந்த நாளில் சுதேசி இயக்கம் துவங்கப்பட்டுள்ளது.
இதனால், இன்னொரு சுதந்திர போராட்டத்துக்கு நாம் தயாராக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியா, மிகப்பெரிய வியாபார சந்தையாக உள்ளது. உலக நாடுகள் அனைத்தும் இந்திய சந்தையால் பல ஆயிரம் கோடி ரூபாய்களை சம்பாதித்து வருகின்றன.
இவ்வாறு, இந்திய சந்தையை பயன்படுத்தி, நமக்கே வரியை விரிக்க அமெரிக்கா துடித்து வருகிறது. அமெரிக்கப் பொருட்களுக்கு எதிராக ஒரு சரியான சந்தையை நாம் உருவாக்கினால் தான், சுதேசி இயக்கம் வெற்றி பெறும்,'' என்றார்.
முன்னதாக, வ.உ.சி., உருவப்படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, அமெரிக்க தயாரிப்பு பொருட்களை தவிர்ப்போம் என உறுதிமொழி ஏற்கப்பட்டது.