/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அடிப்படை வசதி இல்லாத வாரச்சந்தை
/
அடிப்படை வசதி இல்லாத வாரச்சந்தை
ADDED : நவ 15, 2025 01:11 AM

குன்னத்துார்: குன்னத்துார் பஸ் ஸ்டாண்ட் அருகில் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. திங்கட்கிழமை தோறும் செயல்படும் சந்தைக்கு திருப்பூர், அவிநாசி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, 400க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடை வைக்கின்றனர்.
இவ்வாறு அதிக எண்ணிக்கையில், வியாபாரிகள், பொதுமக்கள் வந்து செல்லும் வார சந்தையில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. மேற்கூரை வசதி இல்லை. வியாபாரிகள் தாங்களே கம்பு நட்டு துணியை மேற்கூரையாக பயன் படுத்துகின்றனர்.
மழை நேரங்களில் வியாபாரம் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர். தரையில் கான்கிரீட் தளம் இல்லாததால், மழைக்காலங்களில் தரையில் தண்ணீர் தேங்கி, சேறும் சகதியுமாகிறது. வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர். போதிய கழிப்பறை வசதி மற்றும் மின் விளக்கு வசதி இல்லை.
வியாபாரிகள் கூறுகையில், 'சந்தையின் மூலம் பேரூராட்சிக்கு, 40 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கிறது. ஆனால், அடிப்படை வசதிகள் செய்து தருவதில்லை. முறையிட்டும் நடவடிக்கை இல்லை,' என்றனர்.

