ADDED : பிப் 12, 2025 12:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம் அருகே, சுல்தான்பேட்டையில், பிரபஞ்ச அமைதி அறக்கட்டளை என்ற பெயரில், ஆதரவற்றோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு, 30க்கும் மேற்பட்ட ஆதரவற்ற முதியோர் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
கர்நாடக மாநிலம், பெங்களூருவில் செயல்பட்டு வரும் நம் தாய் மண் அறக்கட்டளை சார்பில், ஆதரவற்றோர் இல்லத்தில் வசிக்கும் முதியோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முன்னதாக, இல்லத்தில் வசிக்கும் முதியோர் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. அவர்களுக்கு தேவையான வேட்டி, சேலை, துண்டுஉள்ளிட்ட உபயோகப் பொருட்கள் வழங்கப்பட்டன.