/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரூ.19 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
/
ரூ.19 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
ADDED : அக் 06, 2025 11:45 PM
திருப்பூர்:திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செயற்கை கால், 'தாட்கோ' சார்பில், ஒருவருக்கு, 10.38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுற்றுலா வாகனம், வேறொரு பயனாளிக்கு 7.16 லட்சம் மதிப்பீட்டில் இயந்திரம் வாங்குவதற்கான ஆணை, பிரதமரின் அணுசக்தி ஜாதி அபியுதாய் திட்டத்தில், 1.50 லட்சம் மதிப்பீட்டில், கறவை மாடு வளர்ப்பு தொழில் துவங்குவதற்கான ஆணை என, மொத்தம் 19.05 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை, கலெக்டர் மனிஷ் நாரணவரே வழங்கினார்.