/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுபாஷ் மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு 'சபாஷ்'
/
சுபாஷ் மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு 'சபாஷ்'
ADDED : மே 20, 2025 12:34 AM

திருப்பூர்; பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2 பொதுத்தேர்வில் சுபாஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அசத்தியுள்ளது.
திருப்பூர், இடுவம்பாளையம் அருகிலுள்ள முருகம்பாளையத்தில் உள்ள சுபாஷ் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். இப்பள்ளியில், பிளஸ் 2 படித்த மாணவி ஸ்ரீநிதி, 554 பெற்று முதலிடம், ஜெயசூர்யா, 551 பெற்று இரண்டாமிடம் மற்றும் கவிதா, 542 பெற்று மூன்றாமிடம் பிடித்தனர்.
பத்தாம் வகுப்பில், நகுலேஷ், 486 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றார். ஸ்ரீஹரி, 476 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், ஜோதிகா, 472 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பெற்றார். அறிவியல் பாடத்தில், இருவர் சென்டம் பெற்றனர். அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியரை பள்ளி தாளாளர் சுப்ரமணியம், செயலாளர் பிரபு, பள்ளி முதல்வர் ரேணுகா மற்றும் நிர்வாக அலுவலர் ராஜேந்திரன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
பள்ளியில் தற்போது ப்ரிகே.ஜி., முதல், பிளஸ்1 வரை மாணவர் சேர்க்கை நடக்கிறது. அட்மிஷன் தொடர்பான விவரங்களுக்கு, 96009 24794 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.